பக்கம் எண் :


இராவண காவியம் 367

   
         16. நின்ற வாரிய முனிவர்கள் நீடு வாழ்கென வாழ்த்தியே
            அன்றி யாமிதற் காகவே யாங்குக் கூடின மன்றியும்
            சென்று கரனைய ணுகவே செய்து வைத்தது மாகுமால்
            முன்றி யாங்கள் நினைத்தது முடிந்த தென்று முழங்கினர்.

         17. கொன்ற ழித்தவன் சென்றுமே குறுகி னானிலைக் குடிலினைச்
            சென்றெ டுத்துமே மறவர்கள் திகைதி கைத்தழு திரங்கியே
            குன்ற ழித்தவன் றோளனைக் குழிவி டுத்துமே நிகழ்வினைச்
            சென்று ரைத்திட விறையிடஞ் சிலரை யேவினர் செருநரே.

         18. சென்று ரைத்திட மறவரைச் செலவி டுத்துமே சென்றிலா
            நின்ற முத்தமிழ் மறவர்கள் நிகழ்வை யெண்ணி வருந்தியே
            கொன்ற ழித்துமே சென்றவக் கொடுமை யுற்றெழு கொடியரை
            வென்றொ றுத்திடத் தக்கவோர் வேளை பார்த்தங் கிருந்தனர்.
 
3. செவிகோட் படலம்
 
ஷெ வேறு வண்ணம்
 
         1.  மலைமயி லனைய காம வல்லியைப் படைவ லானைக்
            கொலைபுரி கொடுமை கண்டாம் கொலைபுரி கொடுமைதன்னைப்
            பலகலைக் கடலை யாய்ந்து பயனடைந் தினிமேற் கற்ப
            திலையென முழுது மான்ற இராவணன் கேட்டல் காண்பாம்.

         2.  கைவல மறவ ரோடு கரன்களப் பட்ட பின்னர்
            மைவளர் விந்தச் சாரல் மருவிய மறவர் சென்று
            தைவளர் மாடக் கூடத் தனிமதி லிலங்கை நண்ணி
            வைவளர் கதிர்வேல் மன்னர் மன்னவற் றொழுது நிற்ப.

         3. என்னெனத் தங்கை யென்ன வினிதென வில்லை யென்ன
            என்னருந் தங்கைக் கென்ன வியன்றதை யுரைமி னென்ன
            என்னெனச் சொல்வோ மென்ன விலையிலை நலமோ வென்ன
            மன்னவர் மன்னா வென்ன மன்னனுந் தங்கா யென்ன.
-------------------------------------------------------------------------------------------
         16. ஆங்கு - சரபங்கன் குடிசையில். 17. செருநர் - வீரர். 2. தை - அழகு. வை - கூர்மை.