தமிழர் இழிவு நீக்கச் செய்யப்பெற்ற, தமிழர் சிறப்புக் கூறும் இத்தனித் தமிழ்க் காவியத்தைத் தமிழர் படிக்கக் கூடாதெனத் தடை விதித்த அன்றைய ஆட்சியாளரின் அடக்குமுறை ஆட்சியைக் கண்டித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலிய பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள் அவற்றுள் ஒரு சில வருமாறு: | அறிஞர் அண்ணா அவர்கள் | புலவர் குழந்தை அவர்களால் ஆக்கப்பெற்ற ழுஇராவண காவியம்ழு என்ற இலக்கிய நூலுக்குச் சென்னை அரசு தடைவிதித்துள்ளது. இராமாயணம் பாடிய வால்மீகியும் கம்பரும் அக்காலத்து ஆசிரியர்கள். இராவண காவியம் பாடிய குழந்தை இக்காலத்து ஆசிரியர்.் வால்மீகிக்கும் கம்பருக்கும் அக்காலத்தில் இராமன் நல்லவனாகக் காணப்பட்டான். குழந்தைக்கு இராவணன் இக்காலத்தில் நல்லவனாகக் காணப்படுகிறான். இராவணன் நல்லவன் என்ற கருத்தைப் புலவர் குழந்தை அவர்களுக்கு ஊட்டியது இராமனை நல்லவனாகக் கூறும் இராமாயணந்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இராமனை நல்லவனாகக் கூறிய வால்மீகி, எந்த ஆதாரத்தின் மீது இராமன் நல்லவன் என்ற கருத்தை வெளியிட்டார் என்பது தெரியவில்லை. இராம - இராவணப் போர் நிகழுவதற்கு முன்னமேயே வால்மீகி இராமாயணம் பாடிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. எனவே வால்மீகி பாடிய இராமாயணத்துக்கு வால்மீகியேதான் ஆதாரம். இராமாயண ஆசிரியரான வால்மீகி, இராம - இராவணப் போர் நிகழுவதற்கு முன்பே இராமனை நல்லவனாகக் கூறும் உரிமையைப் பெற்றிருந்தார் என்றால், இராம - இராவணப்போர் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இராமாயணத்தை அறிவின் துணைக்கொண்டு ஆராய்ந்த இராவண காவிய ஆசிரியர், இராவணனை நல்லவனாகக் கருதும் உரிமையை ஏன் பெறக்கூடாது? ஒருவனை அறியாமுன் - அவனோடு பழகாமுன் - அவனுடைய நடவடிக்கைகளை அறியாமுன் அவனை நல்லவன் என்று கூறும் உரிமை வால்மீகிக்கு இருந்தது. ஆனால், ஒருவனை அவன் இப்படிப்பட்டவன் - அவனுடைய நடவடிக்கைகள் இப்படிப்பட்டவை என்பதை நன்கு அறிந்தபின் அவனை நல்லவன் என்று கூறும் உரிமை புலவர் குழந்தைக்கு இல்லை. இது எந்த வகையில் நியாயம் என்பது எமக்குப் புரியவில்லை. இராமபிரானை நல்லவன் என்று கூறும் உரிமை சிலருக்கு இருக்கும் | |
|
|