போது, இராவணேசுவரனை நல்லவன் என்று கூறும் உரிமை சிலருக்கு ஏன் இருக்கக்கூடாது? அயோத்தி மன்னனான இராமனை வால்மீகி நல்லவனாகக் கூறியதால், இன்று இராமன் கடவுளாகக் கருதப்படுகிறான். இலங்கை மன்னனான இராவணனை வால்மீகி கெட்டவனாகக் கூறியதால், இன்று இராவணன் இராட்சதனாகக் கருதப்படுகிறான். இருவரும் நாட்டையாண்ட மன்னர்கள்தாம். இவர்களில் ஒருவன் கடவுள், மற்றவன் இராட்சதன்! சண்டையிட்டவர்களில் வென்றவன் நல்லவன் மட்டுமல்ல, கடவுளுமாகிறான். தோற்றவன் கெட்டவன் மட்டுமல்ல, இராட்சதனுமாகிறான். இவை எந்த வகையில் நியாயம் என்று புலவர் குழந்தை அவர்கள் தம்முடைய நூலான இராவண காவியத்தின் வாயிலாகக் கேட்கிறார். இப்படிக் கேட்பதைத் தவறென்றும், சட்டவிரோதமென்றும் சென்னை அரசினர் கருதி அந்நூலுக்குத் தடைவிதித்துள்ளனர். மக்களின் உரிமைகளைப் பறித்த ஏகாதிபத்திய அரசை விரட்டிய ‘ஜனநாயக’ அரசே இன்று மக்களின் உரிமைகளைப் பறிக்கும் பணியைத் தங்களுடைய முதல் வேலையாகக் கொண்டுள்ளது. இது உண்மையிலேயே வருந்தக்கூடியதும் வெட்கப்படக்கூடியதுமான ஒரு முறை தவறிய செயலாகும். இராவண காவியம் என்ற அறிவியல் இலக்கிய நூலுக்குத் தடை விதித்த சென்னை அரசினரின் இந்தப் போக்கைக் கண்டித்து, தமிழ் எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர் தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்கள், 15-6-48இல் வெளிவந்த ‘பிரசண்ட விகடனில்’ எழுதியிருக்கிறார். தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்கள் வெறும் எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர் மட்டுமல்லர்; எழுத்தாளர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர்; எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து வாயிலாக நாட்டுக்குச் செய்யக்கூடிய சேவைகள் இன்னின்ன என்பதை நன்கு உணர்ந்தவர். அதனாலேயே அவர் எழுத்தாளர் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர்களிற் பலர் இத்தகைய நடுநிலையைக் கொள்வதில்லை. தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்கள், எழுத்தாளர்களுக்கு ஒரு விழிப்பையும், உண்மையை உரைப்பதில் தயக்கம் காட்டக்கூடாதென்பதையும், இராவண காவியத்துக்குச் சென்னை அரசினர் தடைவிதித்ததைக் கண்டிப்பதன் வாயிலாக எடுத்துக் | |
|
|