காட்டியது உண்மையாகவே பாராட்டக்கூடியதாகும். நம் நாட்டிலுள்ள ஏனை எழுத்தாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் இந்த முறையைக் கையாள்வார்களானால், அரசு இத்தகைய தேவையற்ற காரியங்களில் கண்ணை மூடிக்கொண்டு இறங்கத் துணியாது. எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட இராவண காவியம் என்ற நூலை நன்றாகப் படித்த பின்னரே, அரசினர் அந்நூலுக்குத் தடைவிதித்ததைக் கண்டித்து எழுதியுள்ளார் எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர். அவருடைய கண்டன உரையை அரசினர் கவனித்துத் தங்களுடைய தவறுதலைத் திருத்திக் கொள்வாராக. (அக்கண்டன உரை மூன்றாவதாக உள்ளது.) இராமாயணத்தைப் பொறுத்தவரையில் ஏதாவது தடை உத்தரவு பிறப்பிப்பதானால், அது இராவண காவியத்துக்கல்ல; கம்பராமாயணத்துக்குத்தான் தடை விதித்திருக்க வேண்டும். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர், வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத பல நிகழ்ச்சிகளைப் புதிதாகச் சேர்த்தும், அதில் சொல்லப்பட்ட பல நிகழ்ச்சிகளை மறைத்தும் கம்ப இராமாயணத்தைப் பாடியிருக்கிறார்என்ற உண்மை, கம்பராமாயணத்தையும் வால்மீகி இராமாயணத்தையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பவர்க்கு நன்கு தெரியும். எனவே, இல்லாததைப் புகுத்தியும் இருப்பதை மறைத்தும் எழுதப்பட்ட கம்பராமாயணத்தையன்றோ அரசு தடை செய்திருக்க வேண்டும்? கம்பராமாயணத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆள்வோர்க்கு இதுவரை ஏற்படவில்லையென்றாலும், இராவண காவியத்துக்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற துடிதுடிப்பு ஏற்பட்ட பின்னராவது கம்பராமாயணத்தை ஒருமுறை படித்துப் பார்த்திருக்க வேண்டும். கம்பராமாயணத்தை மட்டுமல்ல, அதன் முதல் நூலான வால்மீகி இராமாயணத்தையும் படித்துப் பார்த்திருக்க வேண்டும். இராவண காவியம் எழுதியவர் ஏன் தம்முடைய நூலில் இராவணனை நல்லவனென்றும், இராமனைக் கெட்டவனென்றும் குறிப்பிடுகிறார் என்ற உண்மை அப்போது தெரியும். இராவண காவிய ஆசிரியருக்கு இராவணனை நல்லவனாக்கும் வித்துக்கள் கம்பராமாயணத்தி்லும் வால்மீகி இராமாயணத்திலும் ஆங்காங்கு புதைந்து கிடப்பதைக் | |
|
|