காணவும் முடியும். இதுமட்டுமல்ல, வால்மீகியால் கடவுளாக்கப்படாத இராமன், கம்பரால் ஏன் கடவுளாக்கப்பட்டான்? கம்பர் ஒரு நாட்டு மன்னனைக் கடவுளாக்கித் தருமளவுக்கு நமக்கு என்ன கடவுட்பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? இராமன் கம்பரால் கடவுளாக்கப்படுவதற்கு முன், நமக்குக் கடவுளே கிடையாதா? நமக்கு ஒரு கடவுள் இருந்ததென்றால், புதிதாகக் கம்பர் எதற்காக ஒருவனைக் கடவுளாக்க வேண்டும்? அதிலும், சமய நூல்களில் கூறுகின்றபடி ஒரு முனிவரையோ, தபசியையோ கடவுளாக்காமல், ஒரு நாட்டை ஆண்ட அரசனை ஏன் கம்பர் கடவுளாக்கினார்? அதே சமயத்தில், இராமனைப் போலவே ஒரு நாட்டை ஆண்ட இராவணனை, மக்கள் வெறுத்து இகழும் முறையில் ஏன் இராட்சதனாக்கினார்? இராமன் கடவுளாக ஆக்கப்படுவதற்கு அவன்பால் காணப்பட்ட நற்குணங்கள் யாவை? இராவணன் இராட்சதனாக்கப்படுவதற்கு இவன்பால் காணப்பட்ட தீயகுணங்கள் யாவை? என இன்னபிற உண்மைகளையெல்லாம், இராவண காவியத்திற்குத் தடை விதிக்க ஏற்பட்ட காரணங்களுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும் ஆள்வோர். இராவண காவியம் என்ற ஒரு நூல் உண்டாவதற்கு ஏற்பட்ட காரணங்கள் என்னென்ன என்பதையன்றோ முதலில் ஆள்வோர் அறிந்துகொள்ள முயற்சித்திருக்க வேண்டும்? இராமனைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் அறிந்துகொள்ள நமக்கு ஒரு நூல் (இராமாயணம்) இருக்கும் போது, புதிதாக இராவணகாவியம் என்ற ஒரு நூல் ஏன் தோன்ற வேண்டும்? அதில் இராமனைக் குறைவாகவும் இராவணனை உயர்வாகவும் ஏன் எழுதப்பட்டிருக்கிறது? இராமனை நல்லவனாக எழுதும் உரிமை ஓர் ஆசிரியருக்கு இருக்கும்போது, இராவணனை நல்லவனாக எழுதும் உரிமை ஏன் இன்னொரு ஆசிரியருக்கு இருக்கக்கூடாது? என்பன போன்றவைகளையும் ஆள்வோர் யோசித்திருக்க வேண்டும். வால்மீகி இராமாயணத்தில் இல்லாததும். புதிதாகச் சேர்க்கப்பட்டதுமான பல கருத்துக்கொவ்வா நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கம்பராமாயணம் நாட்டில் நடமாடும்போது, அறிவுக்கு அணிகலமாக விளங்கும் ஆராய்ச்சி நூலான இராவண காவியம் மட்டும் நாட்டில் இருக்கக்கூடாதா? இராவணகாவியத்திற்குத் தடைவிதித்த அரசு, அதற்குத் தடைவிதிப்பதற்கு முன் ஒன்றை யோசித்திருக்க வேண்டும். அதாவது, மக்களிடையே கருத்து வேற்றுமைகளை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள் பல | |
|
|