கம்பராமாயணத்தில் இருக்கின்றன. அதனால்தான், கம்பராமாயணக் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை உண்டாக்கும் இராவண காவியம் போன்ற நூல்கள் உண்டாக வழி ஏற்படுகிறது; கம்பராமாயணம் இல்லை என்றால் இராவண காவியமும் எழுந்திருக்காது; இராவண காவியத்தை உண்டாக்கியது கம்பராமாயணந்தான்; என்பவற்றை யோசித்துப் பார்க்கும் அளவுக்கு ஆள்வோர்க்கு ஆற்றல் இருந்திருக்குமானால், கம்பராமாயணத்துக்கே முதலில் தடைவிதிக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் ஏற்பட்டிருக்கும், அங்ஙனமன்றி, எய்தவனை விட்டு அம்பை நோவதுபோல், இராவண காவியம் என்ற ஒரு நூல் உண்டாவதற்குக் கருவியாய் நின்ற கம்பராமாயணத்தைத் தடைசெய்யாமல், இராவண காவியத்தைத் தடைசெய்வது எந்த வகையிலும் நியாயமான செயலாகாது. இதுபற்றி ஆள்வோர் இதுவரை யோசிக்கவில்லையென்றால், இனியாவது அன்னார்க்கு இந்த எண்ணம் ஏற்பட வேண்டும். இனி, கம்பராமாயணத்திலுள்ள கதைப்போக்கு எப்படியிருந்தாலும், அது அறிவுக்குப் புறம்பானதாக இருந்தாலும், அதிலுள்ள கவிநயத்தை நினைக்கும்போது, அதனைப் போற்றி வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகுமேயன்றி, அதனை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி உண்டாகும்? என்ற சில காவிய ரசிகர்களின் கருத்தை ஆள்வோர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அதற்குத் தடைவிதிக்காமல் இருக்கலாம். அதனையும் நாம் தவறென்று கூறவில்லை. கம்பராமாயணத்திலுள்ள காவியச் சுவையைக் கற்கண்டெனச் சுவைக்கட்டும். அதுபோலவே, இராவண காவியத்திலுள்ள கருத்துக்களை விட்டுவிட்டு, அதன்பாலுள்ள காவிய நயத்தையாவது மக்கள் சுவைத்தின்புறட்டும் என்று விட்டுவிடலாமே! அதற்கு ஏன் தடைவிதிக்க வேண்டும்? கம்பராமாயணத்திலுள்ள குறைகளை ஒப்புக்கொண்டு அதன் காவிய நயத்தை நுகரும்போது, இராவண காவியத்திலுள்ள குறைகளையும் (இருந்தால்) ஒப்புக்கொண்டு அதன் கவிநயத்தையும் மக்கள் நுகரும்படி விட்டுவிடலாமே! கம்பராமாயணத்தைப் பார்க்கிலும் இராவண காவியம் கவிநயத்திலோ, இலக்கியப் பண்பிலோ குறைவுடையது - தாழ்ந்தது என்று எவராவது கூறமுடியுமா? | | ழுதமிழ் இலக்கியத்தின் அணிகலமாய் இருக்கத் தகுந்த அருமையான காவிய நூல்ழு | |
|
|