என்று எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர் தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்களே கூறியுள்ளார். எனவே, இராவண காவியம் கவிநயம் அற்றதென்றோ, கவிநயத்துக்காக மக்கள் அதனைப் படிக்கக் கூடாதென்றோ எவரும் கூறமாட்டார்கள். ஆகையால், கம்பராமாயணம் இந்நாட்டில் இருக்கத் தகுதியுடைய நூல் என்றால், அதைப் பார்க்கிலும் பலவகையிலும் சிறந்த இலக்கிய நூலான இராவண காவியமும் இந்நாட்டில் இருக்கலாம். கம்பர், இராமனைக் கடவுளாக்கியது போல், புலவர் குழந்தை இராவணனைக் கடவுளாக்கவில்லை. வால்மீகியும் கம்பரும் பிறரும் இராவணனைக் கெட்டவன் என்று கூறியதைத் தக்க ஆதாரங்களோடு மறுத்து, இராமனே கெட்டவன், இராவணன் நல்லவன் என்பதையே இந்நூலாசிரியர் விளக்கிக் காட்டியுள்ளார். இதனைக் குற்றமென்றும், ஆபததை விளைவிக்கக் கூடியதென்றும் அரசு கருதுமேயானால், குற்றவாளி யார்? என்பதை அன்னாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுதான் முடிவுசெய்ய வேண்டும். யார் குற்றவாளி? கம்பரும் வால்மீகியுமா? அல்லது தோழர் குழந்தையா? பொதுமக்களே தீர்ப்புக் கூறுங்கள்! - 20-6-48: ‘திராவிடநாடு’ இதழில | |
|
|