பக்கம் எண் :


இராவண காவியம் 43

   
பரிந்துரைகள்
கலைஞர் கருணாநிதி அவர்க்
 
     குன்றெடுக்கும் பெருந்தோளான் - கொடை கொடுக்கும் தடக்கையான் - குள்ளநரிச்
செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம் - என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
வஞ்சக வீடணனின் அண்ணன் என்று தன்னை வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே
அஞ்சும் நெஞ்சகன், நல்யாழின் நரம்புதனைத் தடவிச் செவி நிரம்ப இசையமுது தரும்
இசைப் புலவன், வெஞ்சமரில் சாதல் வர நேரிடினும் சூழ்ச்சி விரும்பாத பெருந்தகை,
தென்னிலங்கை வேந்தன் இராவணன். அவன் சிறப்பைப் பற்றிப் புலவர் குழந்தை ஒரு
காவியம் புனைந்தார்; இராவண காவியம்! ஆம் அஃதொரு புதுமைச் சோலை.
அச்சோலைக்குத் தீயிட்டனர் செங்கோலேந்திகள். இராவண காவியத்திற்குத் தடை
போட்டனர்;
ழுவிற்காதே - வாங்காதேழு என முழக்கமிட்டது அரசினரின் சட்டம்.

     இராவண காவியம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்? ஏன் பறிமுதல் செய்யப்பட
வேண்டும்? என்று நாங்கள் நினைக்காமலிருக்க முடியுமா? நினைக்கிற நேரத்தில் எங்கள்
நெஞ்சு நெருப்பாகத்தான் மாறாமலிருக்க முடியுமா?

     ஓமந்தூராரை அழைத்துக் கொண்டு கம்பராமாயணச் சோலையிலே உலவி
வந்தோம். அங்கே பூத்துக் குலுங்கியிருந்த மலர்களில் பூநாகங்கள் நெளிவதை அவருக்கு
காட்டினோம்.
நாமம் போட்டிருப்பது ராமனல்ல.... நம் மினத்தைக் கடிக்க வந்த நல்ல பாம்பு என
எச்சரித்தோம். அதோ சலசலவென ஒடுவது நீரோடை யல்ல..... நம் கலைவளத்தை
நாசமாக்கும் நச்சுவாய்க்கால் என விளக்கந் தந்தோம். அத்தோடு விட்டோமா?
மிதிலாபுரியைக் காட்டினோம். மிதிலையின் மாளிகையில் சனகன் மகள் சானகியைக்
காட்டினோம். வில்லொடித்துச் சீதையை விவாகம்செய்ய விசுவாமித்திரருடன் வரும்
இராமனைக் காட்டினோம். சீதையின் கண்களும் இராமன் கண்களும் கவ்விக் கொண்ட
காட்சியைக்