காட்டினோம். இராமனின் காட்சியால் புளகாங்கித முற்று - பூரிப்புத் தாங்க முடியாமல் - பொங்கி நின்ற பூமாதா சீதாதேவியைப் பற்றிக் கம்பர் பாடிய பாடலைக் காட்டினோம். அந்தப் பாடலிலே, மகிழ்ச்சி தாங்க முடியாமல் சீதையின் மறைவிடம் திடீரென விம்மியதையும், அதனால் மேகலாபரணம் அறுந்து விழுந்ததையும் கம்பர் வருணித்திருக்கிற பாங்கைப் படித்துக் காட்டினோம். மகாலட்சுமி அவதாரத்திற்கு ழுவாம மேகலையினுள் வளர்ந்த தல்குலேழு என்று மட்டரகமாக வருணனை தந்த கம்பனின் இழிதன்மையைக் காட்டினோம். இந்த ஆபாச இராமாயணத்துக்குத் தடைவிதிக்கத் தைரிய மற்ற சர்க்காரே! நீ எங்கள் இராவண காவியத்திற்குத் தடை போட்டது நியாயமா? நேர்மையா? நாணயமா? என்று கேட்டோம். கண்களிலே ரத்தம் தெறிக்க - அந்த ரத்தத்திலே (ரோஷம்) மானங் கொப்புளிக்கக் கர்ச்சனை புரிந்த நாங்கள் ஈரோடு நோக்கினோம். பொறு மனமே... பொறு என்றார் பெரியார். போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. - 1948இல் ‘அறப்போர்’ என்னும் நூலில் | |
|
|