பரிந்துரைகள் | தமிழ் எழுத்தாளர், மாநாட்டுத் தலைவரும், ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியருமான | ரண துரைக்கண்ணன் அவர்கள் | இராவண காவியத்துக்குத் தடை: தமிழ் இலக்கியத்தின் அணிகலமாய் இருக்கத் தகுந்த அருமையான காவிய நூலொன்றைச் சென்னை அரசாங்கம் பறிமுதல் செய்திருக்கிறது. இந்நூல் ‘இராவண காவியம்’ எனப் பெயர் பெறும். இதனைப் புலவர் குழந்தை எழுதியிருக்கிறார். இந்நூலில் இராவணன் இராமனைவிட உயர்ந்தவன் என்ற கருத்து மையப் பொருளாக இருக்கிறது. இராமாயணத்தை இயற்றிய ஆசிரியர்களுக்கு இராமனைப்பற்றி உயர்வாகச் சொல்ல எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமை இராவணனைப் பற்றியும் சொல்வதற்கு ஓர் ஆசிரியனுக்கு உண்டு. இராமாயணத்தைக் கற்பனைக் கதை என்று சொல்வோரும் உண்டு. இதன் வாதப் பிரதிவாதங்களில் இப்பொழுது நாம் இறங்க விரும்பவில்லை. ஆனால், சென்னை அரசாங்கம் இந்நூலுக்கு விதித்த தடை தமிழ் இலக்கிய வளர்ச்சிமீது போட்ட தடை என்றுதான் நாம் எண்ணுகிறோம். தேவகுமாரன் எனப் போற்றப்படும் கிறித்துவின் பிறப்பைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் எத்தனையோ விதவிதமான ஆராய்ச்சி நூல்களை மேனாட்டில் சிறந்த பேரறிஞர்கள் எழுதியுள்ளார்கள். கிறித்து என்றொருவர் பிறக்கவே இல்லை என்றும், அப்படிப் பிறந்திருந்தாலும் கன்னி மேரியின் முகத்தில் உதி்த்திருக்க முடியாதென்றெல்லாம் அவர்கள் கண்டனந் தெரிவித் திருக்கிறார்கள். இதுபோலவே, இவ்வுலகத்தைக் காத்து நிற்பதாகச் சொல்லும் ஒரு கடவுள் இல்லை என்றும் சிறந்த ஆராய்ச்சி நூல்களை விஞ்ஞானப் பேரறிஞர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உதாரணமாக, கிறித்துவினிடத்திலும், அவரது சமயத்தினிடத்திலும் நம்பிக்கை கொண்டு அரசாட்சி நடத்திவரும் ஐரோப்பிய நாடுகளில் மேற்கண்ட நூல்கள் தடுக்கப்படவில்லை. காரணம், அறிவுக்குத் தடைவிதிக்கக் கூடாதென்பதும், மக்களின் அடிப் | |
|
|