பக்கம் எண் :


376புலவர் குழந்தை

   
        16. ஒல்லுவ தறிந்துமு னுளங்கொளவே யண்ணல்
           சொல்லிய படிக்கவள் துணுக்குறமா ரீசன்
           நல்லதுற வேசீதை லக்குமணா வென்றான்
           மெல்லியல் துணுக்கெனவவ் வெய்யமொழி கேட்டே.

        17. மானினை விழைந்துமட மங்கைமதி கெட்டேன்
           ஆனது மறக்குமோ ஐயோதமிழ் மறவத்
           தானைவளை கொண்டது தனித்திட விளையோய்
           ஏனினமு நிற்கிறையிங் கேகென வுரைத்தாள்.

        18. அவ்வகை நினைக்கலையெ னண்ணன்வலி கொல்வோர்
           இவ்வுலகில் யாருமிலை யேழையறி வாயோ
           ஒவ்வுமோயான் சொல்லுத லுனைத்தனி விடுத்தே
           இவ்வளவோ அண்ணனுரை யேற்பிலனு மாவேன்.

        19. என்னவட தீயனே யெனையடைய வெண்ணி
           இன்னிய லிலாதெமுட னின்றுணைபோல் வந்தென்
           மன்னனது சாவையெதிர் பார்க்குநைகொல் வஞ்சா
           இன்னபல தீயசொ லியம்பியே யுழன்றாள்.

        20. என்றவுரை கண்டிலையோ னென்னமதி முன்னைக்
           கொன்றிடவொ லாதெனவோ கோதையட பாவீ
           என்றனை விரும்பியே யிவாறுபகர் கின்றாய்
           அன்றியவள் மைந்தனு மனுப்பினனோ வுன்னை.

        21. காக்கவென வந்தடடா காமுகா எனைப்பெண்
           டாக்கநினை கின்றனை அடாதசெயல் செய்ய
           ஊக்குமுன தெண்ணமுறு மோவிலையே னாவி
           போக்குவெ னெனப்பொனும் பொருக்கென வெழுந்தாள்.

        22. இப்படிநீ பேசுவ திலைப்புதுமை பெண்டிர்
           செப்புசுடு சொற்களெனுந் தீயவடி வேலால்
           ஒப்புடைய வாடவ ருளமெனு மரம்பி
           ளப்பது முறவுபகை யாக்கலு மியல்பே.
-------------------------------------------------------------------------------------------
        16. ஒல்லுவது - இயல்வது. நல்லது உற - நல்லதாகட்டும். இராமன் இடருட்பட்டு உங்களுக்கு நல்லதாகட்டும் எனக் கூறினதாகக் கொள்ளற்கு இவ்வாறு கூறினான். 19. இன்இயல் - நல்லொழுக்கம். 20. அவள் - கைகேசி. பரதன் சூழ்ச்சியால் என் கணவனைக் கொல்ல உடன்வந்தாயோ என்றாள். பரதனுக்காகக் கைகேசி செய்தாளென்பதைப் பரதன் மேலேற்றிக் கூறினாள்.