பக்கம் எண் :


378புலவர் குழந்தை

   
        30.  வெற்றிவடி வேலவன் விடுக்கவென வத்தேர்
            மற்றவர் மனத்தினெழு வாகையினு முந்தி
            உற்றவர் தமக்குரைசெய் வோரினனி செல்லப்
            பொற்றொடி மனத்தின புலம்புதலு மானாள்.
 
கொச்சகம்
 
        31.  அப்பா விளையோய் அறியா தவதூறு
            செப்பினே னுன்றனது செம்மையறி யாப்பாவி
            இப்போது வாராயோ என்செய்கே னையகோ
            தப்பிலியான் கெட்டேன் தசரதன் கோக்களிறே.

        32.  யாரையா நீவிர் அறியா தெனையெடுத்துத்
            தேரேற்றிக் கொண்டெங்கு செல்கின்றீர் ஐயோநும்
            ஊரேதோ தேறேன் ஒருவற் குரியாளை
            நீரேன் சிறைசெய்தீர் நேரோநா னுங்களுக்கே.

        33.  என்னவே மன்னன் இலங்கைக் கெனநடுங்கிப்
            பின்னவா கெட்டீரோர் பேதையால் மாபாவி
            உன்னை யிகழ்ந்தேனா உன்மீதி லையுற்றேன்
            மன்னவா வென்றுன் மலர்முகத்தைக் காண்பேனோ.

        34.  இனியானென் செய்கேன் இதுகேட்டாற் கைகேசி
            மனமகிழா தேயிராள் மாமீநீ கெட்டாய்
            கனைகழலோய் மாறில்லாக் கரனோடென் போன்றவொரு
            பனிமொழியைக் கொன்ற பழிக்கிலக்கென் னாக்கினையே.

        35.  அன்னே தமிழகத்தை யண்டுதல்நீ தென்றெடுத்துச்
            சொன்னேனே கேட்டீரா சொற்றவறே னென்றீரே
            கொன்னே தவக்கோலங் கொண்ட முனிவர்களால்
            மன்னாவோ வித்தீங்கு வந்ததுகா ணென்செய்கோம்.

        36.  மாவினங்காள் புட்காள் மரங்காள் மலர்க்கொடிகாள்
            காவினிடை வாழுங் கடிகொள் சுரும்பினங்காள்
            தேவி யெனையெடுத்துச் செந்தமிழர் தென்னிலங்கை
            போவதா நீவிர் புகல்வீரெங் காதலற்கே.

        37. அன்புக்கு வித்தாய் அருளுக் குறைவிடமாய்
            இன்புக்கு முத்தா யெழுந்த விருந்தமிழர்
            துன்புக்கு வித்தாய்த் தொலையாப் பகைகொண்ட
            பின்புக் குரைக்கும் பெயராரிக் கானகத்தே.