52. செந்தமிழ் மறவர் பிடித்திவண் வருவர் செல்வியீங் கடைதரி னிலங்கைக் கொந்தவிழ் குழலார் நகைபுரிந் தினிப்பெண் கொலைபுரி யேலெனப் பழிப்ப நொந்துதஞ் செயலை யறிவுவந் ததென நுவலவைத் தேயவ ரோடு பைந்தொடி யுன்னை யனுப்புவ லினிமேற் பகர்வதிற் பயனிலை யென்றான். 53. என்றிறை மொழிய வேழையான் செய்வ தென்னினித் தங்கள் துள்ளம் ஒன்றிய படியே செய்யிய ரவருக் கூறுசெய் யாதருள் புரிவீர் என்றவள் வணங்க இலையிலைத் தமிழர் இறக்கினுஞ் சொன்னசொற் றவறார் நன்றுநீ யிருக்க வெனவவள் பிழைத்தேன் நாமவேற் செல்வனே யென்றாள். 54. வருகையை யறிந்து வந்துமே குழீஇய வண்டமிழ்ப் பெண்டிர்க ளெல்லாம் தெரிவையுன் கணவற் கிதுதகா தென்னச் செப்பியே தடுத்திதா னென்ன வரவையே தடுத்தே னெங்கைமீர் பின்னர் வன்கொலை புரிந்ததை யறியேன் செருவினைத் தடுத்தேன் கேட்டில ரேழை செய்வதென் னெனச்சொலி யழுதாள். 55. வருந்தலை யென்றே தேற்றினர் மகளிர் மாபெருந் தேவியு மம்மா பொருந்திய கணவர் தீயன செய்தாற் பூவையர் திருத்தலாம் திருத்தின் திருந்தில ரென்னிற் செய்வதொன் றில்லைத் தீயரைத் துறப்பதே மேலாம் அருந்தமி ழிலங்கைக் கொருவிருந் தினளாய் அளவளாய் வாழிய வென்றாள். ------------------------------------------------------------------------------------------- 52. கொந்து - பூங்கொத்து. 54. வரவு - தமிழகம் புகுந்தது. செருகரன் போர். | |
|
|