பக்கம் எண் :


388புலவர் குழந்தை

   
       34. மூறுபெண் களைவட முறையி லிம்மியும்
          தான்றவ றாதருந் தகவி னோடறம்
          போன்றுவன் கொலையது புரிந்து மேம்படு
          சான்றவர் போயினார் தமிழர் வாழவே.

       35. போகுறு வழியினிற் புள்ளு மாவையும்
          மாகொலை புரிதுதம் வயிற்றை யோம்பியே
          தோகையைக் காணுவான் றூண்டு முள்ளத்தார்
          ஏகியோ ராரிய னிருக்கை யெய்தினர்.

       36. எய்தியே மனைவியை யிழந்து போந்ததன்
          செய்தியை யுரைதரச் சிறுவ கண்டனன்
          மைதிகழ் கண்ணியை இலங்கை மன்னவன்
          கொய்தொழிற் றேர்மிசைக் கொண்டு சென்றனன்.

       37. நடந்ததை நினைத்துநீ நடலை கொள்ளலை
          மடந்தையைப் பெறவொரு வழியுண் டென்னெனில்
          உடைந்துனைப் போலர சொருவன் நாடொரீஇ
          அடைந்துளா னதோதெரி யருவிக் குன்றினே.

       38. மைந்தகேள் செந்தமிழ் வளர்க்கு மன்னவன்
          வெந்திறல் வேலினன் வீர வாலிபின்
          வந்தவன் பல்வள மருவி யோங்குகிட்
          கிந்தையை யுடையசுக் கிரீவன் என்பவன்.

       39. முன்னனாம் வாலியால் முனிந்து நாடொரீஇத்
          துன்னெனக் கானகந் துரத்தப் பட்டவப்
          பின்னவன் நட்பினைப் பெறுதல் கூடிடின்
          இன்னியல் சீதையை எளிதில் மீட்கலாம்.

       40. அரசினை யிழந்துமுன் னவனுக் கஞ்சியே
          உரைபெறு கிட்கிந்தை ஒருவிக் கான்வளர்
          பரிசின னுறுதுணை பார்த்து வாழ்கிறான்
          கரிசன மோடுமைக் கலந்து கொள்ளுவான்.

       41. நம்பிநீ இவ்வழி நடந்து செல்லினே
          பம்பையங் கரையினைப் பார்ப்பை அங்கதிர்ப்
          பென்பதி லாதமா னினமும் புட்களும்
          தின்பதற் கினியநெய்த் திரளை போலுமால்.
-------------------------------------------------------------------------------------------
       41. அதிர்ப்பு - நடுக்கம். நெய்த்திரள் - வெண்ணெய்க் கட்டி.