6. நட்புக்கோட் படலம் | அறுசீர் விருத்தம் | 1. இருண்டகுழல் மருண்டவிழி யிளைத்தவிடை திளைத்தமுகத் தினியாள் தன்னை இருண்டமனக் கொலைத் தொழிலர் புலைத்தொழிலர் தேடியத னியல்பு கண்டாம் இரண்டகனாஞ் சுக்கிரீவற் காப்பகையி லானைமறைந் தெய்தே கொன்றவ் இரண்டகனுக் கரசீந்து துணைக்கொண்ட வகையினையீங் கினிது காண்பாம். 2. கரைபொருபைம் புனற்பம்பைக் கரையிருந்த சிலைராமன் காமப் பித்தால் உரைபெறும யோத்திவிட்டுப் பதின்மூன்றாண் டாயினவென் னுரைகோ ளெம்பி விரைசெறியுங் குளிர்தென்ற லானதினாற் குயிலோசை மிகுக்குந் துன்பம் நிறைவளைமுன் னொருநாள்மற் றதுகேட்டுப் பலவகையா நேர்ந்தா னின்பம். 3. நாட்டிருக்கும் போதெடுத்துப் போகாதப் பாவிமனம் நாடா வின்பங் கூட்டுவிக்குந் தனியிடமுங் குளிர்நிழலும் புற்றரையுங் கூடி யுள்ள காட்டிருக்கும் போதெடுத்துப் போயினனே யித்தகைய காட்டிற் றம்பெண் டாட்டியுட னின்பமுற்று வாழ்வாரே தவஞ்செய்வா ராவா ரப்பா. | |
|
|