8. வந்தவனு மறைமுனியை வணங்கியிவ ராரென்ன மதிவல் லோய்முன் உந்தனிடம் யாமுரைத்த வயோத்தியர்கோன் றசரதனு முவந்து பெற்ற மைந்தரிவ ரேராம லக்குவராம் சிலைராமன் மனைவி தன்ைசை் செந்தமிழ்நாட் டிறைகொண்டு சிறைவைத்தா னிலங்கைதனிற் சீதை தன்னை. 9. சிறைமீட்க வுங்கள்பெருந் துணைவேண்டி யீங்குற்றார் தெளிவா யென்ன மறைமுனிகூ றலும்பணிய ராமனிவன் யாரென்ன வாலி தம்பி அறனிழுக்காச் சுக்கிரீவன் மதியமைச்சன் படைத்தலைவ னனுமன் என்பான் திறமையிலிவ் வுலகினிலே யிணையில்லா னெனமுனிவன் சிலைக்கை ராமன். 10. சொல்லுகெனப் பணிப்பவிளை யோனனுமன் றனைப்பார்த்துத் துரிசி லாத நல்லமைச்ச ரேறேயுன் றலைவனையாம் புகலடைந்தோம் ராம னுங்கள் வல்லரசன் றனைத்தலைவ னாவடைய விரும்புகிறான் வலிய வந்து புல்லியதன் குடியுளொரு வனதருளை வேண்டுகிறான் பொருளா யெண்ணி. 11. புதுவரவை விலக்குவரோ புலமையுளார் வலியவந்து பொருந்து நட்பை மதிவலியேற் றருள்கென்ன வவனஞ்சே லெனத்தேற்ற மகிழ்ந்து பின்னர் மதங்கரிடம் விடைபெற்றம் மூவர்களுங் கிட்கிந்தை மன்னன் றம்பி பதுங்கியுறை தருமிடத்தை யடைந்தவரை வெளிநிறுத்திப் படைவ லோனும். ------------------------------------------------------------------------------------------- 10. எவ்வாறு இராமனுக்குச் சுக்கிரீவன் குடியோ? | |
|
|