பக்கம் எண் :


இராவண காவியம் 393

   
        12. நண்பர்களைப் பிரிந்தவர்கள் நலமாக
                வெளிநிற்ப நடந்து சென்றே
           கண்புகுதா மறைவிடத்திற் றனியிருந்த
                விளையோனைக் கண்ட யோத்தி
           மண்புரிவான் மனையிழந்து துணைவேண்டி
                வந்துள்ளான் மன்னா வென்னப்
           பண்பிதுவே யெனவெளிவந் தினிதவனால்
                வரவேற்கப் பட்டா ரன்னான்.

        13. என்றனது துணைநாடு முன்பெருமை
                தனையமைச்ச னெடுத்துச் சொன்னான்
           அன்றியுமுன் பேமதங்கர் கூறவுன்றன்
                பெருமையினை யறிந்துள் ளேனால்
           கொன்றெனது தமையனைநீ கிட்கிந்தை
                தனையெனக்குக் கொடுப்பா யானால்
           உன்றனது மனைவிதனை மீட்பதற்கென்
                னாலியன்ற வுதவி செய்வேன்.

        14. நாடிழந்து காடடைந்து மனையிழந்து
                வருந்துகின்ற ராமா வுன்போல்
           நாடிழந்து மனையிழந்து காடலையும்
                நம்மிருவர் நட்பே நட்பு
           வீடினுமுன் னட்பினையான் விடுகில்லேன்
                உன்மனையை வீட்டித் தாரேன்
           கூடுகிலா யெனத்துரத்துந் தமையனைக்கொல்
                லெனவவனுங் கொல்வே னென்றான்.

        15. அன்றோராண் களிறனைய பகைவன்மலைக்
                குகையதனை யடைய முன்னோன்
           சென்றானக் குகையினுளே யெனைவாயில்
                தனில்வைத்தத் தீயோற் கொல்ல
           ஒன்றோவல் லொடுபகலும் வரவில்லைக்
                குருதிவர வொன்னோன் முன்னைக்
           கொன்றானென் றேயெண்ணிக் குகைவாயி
                லடைத்துநகர் குறுகி னேனால்.
-------------------------------------------------------------------------------------------
        15. ஒன்றோடு - அப்பகல்மட்டுமா. ஒன்னோன் - பகைவன்.