16. முன்னவன்சா வினையெவர்க்குஞ் சொலவில்லை மதியமைச்சர் முன்னத் தோர்ந்தே என்னையவர் வற்புறுத்தி யரசாக்கி னார்சிலநா ளிருக்க முன்னோன் ஒன்னலனைக் கொன்றுநக ரடைந்தொறுத்து நாட்டைவிட்டீங் கோட்டி னான்காண் அன்னவனைக் கொன்றரசை யெனக்கீவா யெனக்கூற வயோத்தி ராமன். | கலித்துறை | 17. ஐய நீயுமின் றேநக ரடைந்துமே றியவில் வெய்ய னோடுபோர் செய்யவன் களத்திடை வீழப் பைய வேயொரு கணையினா லவனுயிர் பறித்துத் துய்ய மாமுடி சூட்டுவே னுனக்கெனச் சொல்ல, 18. சொன்ன வாறவன் றுணையொடு தொன்னக ரடைந்து முன்ன னோடுபோர் செய்திட முறையிலா ராமன் என்ன வன்செய லோவறி யோமறைந் திருந்தே அன்ன வன்பட வம்பினை விடு்த்தன னந்தோ. 19. விலங்கி நின்றறந் திறம்பிய வாரியன் விடுத்த துலங்கு செந்தமிழ் மன்னவர் வழிவழி துலங்க இலங்கு பொன்முடி புனைந்துகிட் கிந்தையா ளிறைவன் கலங்கி வீழவன் மார்பிடைப் பட்டதக் கணையே. 20. அம்பு பட்டமார் படையசெந் தமிழர் தம்மரசும் வெம்பி நோக்கியே வீணனே யெதிர்வர வெருவித் தெம்பி லாதுநீ மறைந்திருந் தம்பினாற் செகுத்தாய் எம்பி யோடுபோந் தடர்த்தநீ யாரென விராமன். 21. பொன்னின் மாமுடி புனைந்துய ரயோத்தியைப் புரக்கும் மன்னர் மன்னவன் பெரும்பெயர்த் தசரதன் மைந்தன் உன்னை வீழ்த்தியும் பிக்கர சீயவீங் குற்றேன் என்ன மன்னனு மடகெடுத் தாயென விகன்றே. ------------------------------------------------------------------------------------------- 18. முன்னம் - குறிப்பு. ஓர்ந்து - தெரிந்து. 20 தெம்பு - வலி. | |
|
|