பக்கம் எண் :


396புலவர் குழந்தை

   
       29. இல்லை யில்லைதம் பில்லைநின் செய்கைநின் னினத்தார்
          புல்லை வெட்டல்போல் மக்களை வெட்டியே புசிக்கும்
          தொல்லை வாழ்க்கைய ரவரினு மக்கொலைத் தொழிலில்
          வல்லை நீயுமோ ராரிய னென்பதை மறந்தேன்.

       30. அறமெ னச்சொலிப் பிழைப்பவ னென்பதை யறியேன்
          மறமி குத்தவென் றனைவதை புரிந்தனை மறைந்தே
          அறிவி லாயென திடஞ்சொலி யிருக்கினா னவளை
          இறையி டஞ்சொலி வாங்கியே கொடுத்திருப் பேனே.

       31. பிழைக்க வந்தவ னெந்தமிழ் நாட்டிடைப் பின்னோன்
          அழைக்க வந்துநீ யழிதொழில் புரிந்துமே யல்லல்
          இழைக்க லாயினை யென்கொலை யாரியர்க் கிறுதி
          விழைக்க நீசெய்த தாமென வறிகுவாய் வீணா.

       32. அன்றி யானொரு குகையுற வாயிலை யடைத்தே
          ஒன்றி யூரினை மன்னனா யிருக்கயா னூரைத்
          துன்ற வஞ்சியே யோடின பாவிக்குத் துணையாய்
          இன்று வந்தெனைக் கொன்றையா ரியமுறை யிதுவோ.

       33. தன்ற வற்றினை யெண்ணியே யானவன் றன்னைப்
          பொன்று விக்குவ னென்றுமே யஞ்சியப் புல்லன்
          மன்ற லங்குழல் மாதினை விட்டுமே மறைவாய்ச்
          சென்றொ ளித்தனன் கானிடை யென்பது தெரியாய்.


       34. சென்ற ழைத்தவென் ஏவலன் சொல்லினைத் தேறான்
          ஒன்றி வந்திலன் என்சொலை நம்பியே ஊர்க்கு
          நன்றி லாதவப் பாவிக்குத் துணையதா நண்ணிக்
          கொன்றொ ழித்தனை யென்றனை நன்றிலாக் கொடியா.

       35. அரச னானதன் னண்ணனைக் குகையினி லடைத்து
          வரிசை யின்றியே வழிமுறை தவறியே வலிதின்
          அரச னாகிய எம்பிதன் செயலர சடையும்
          பரிச தாகுமோ அரசெனப் பெயரியோய் பகர்வாய்.

       36. எம்பி சொன்னவப் பொய்யினை நீயுண்மை யென்று
          நம்பி வந்துபோர் முறையது தவறியே நடந்தாய்
          உம்பி யெம்பிபோல் நடந்திருந் தாலென்ன வோர்வாய்
          வம்பி லேவந்து குறுக்கினில் விழுந்தனை வம்பா.
-------------------------------------------------------------------------------------------
       29. மக்களை வெட்டிப்புசித்தல் - நரமேதம். 31. விழைக்க - விரும்பச் செய்ய. 35. பரிசு - முறை. 36. ஓர்தல் - எண்ணுதல்.