39. தண்டமி ழனுஞ்சரி சரியென் றாழ்துயர் வி்ண்டிடத் தகுமொழி விளம்பி மேதகக் கொண்டுவந் தவைபெறக் கொடுத்துப் பின்பொருங் குண்டுவந் தவளையு முவப்பிச் சென்றனர். | 8. சீதை துயருறு படலம் | அறுசீர் விருத்தம் | 1. ஆங்கவர் போய பின்ன ரருந்தமி ழிறைவ னுள்ளப் பாங்கினை யெண்ணி யெண்ணிப் பரிந்துள நைவாள் பின்னர் ஈங்கினி திருப்ப தல்லா லிலையினிக்கூட லென்றே ஏங்கியே யெரியிற் பட்ட விழுதெனக் குழைவா ளுள்ளம். 2. இனத்தினர் தமைக்கொன் றையோ இலங்கைவேந் தனுக்கு மேலும் சினத்தினை மூட்ட லல்லாற் சிறியனை மீட்க வன்னார் மனத்தினி லெண்ணங் கொள்ளல் மருந்துக்கு மில்லா ராகிப் புனத்தினி லினிதூ னுண்டு பொழுதுபோக் கின்றார் போலும். 3. சின்னவன் பேச்சைக் கேட்டுச் சிறிதுமே பகைமை யில்லா முன்னவன் றன்னைக்கொன்று முறையிலா திளையோன் றன்னை மன்னவ னாக்கி யன்னான் வழித்துணை யாகக் கொண்ட தென்னவோ இலங்கை போத லிதனினு மரிய தேயோ. 4. யாதென வறிகி லாதேன் என்செய்வே னென்று வந்து போதுதி யென்று கூட்டிப் போவரோ பூவின் மீது மாதியா னொருத்தி யோவிப் பேறொடு வந்தேன் என்றன் காதலா உன்னைக் கூடக் கடவனோ கழறு வீரே. 5. தடுத்ததை மறுத்தே யன்று தமிழகம் புகுந்தீர் பின்னர் எடுத்ததை முடிக்கு மண்ண லிளையளை யுருக்கு லைத்தே கெடுத்தனிர் மேலு மண்ணல் கிளைகளை யழித்தீ ருங்கள் படைத்தொழில் மேலும் ஏழை பதைத்திடப் பயிலுவீர் போலும். 6. என்னுயிர் தன்னை யெண்ணீர் எரிமலை குமுறும் போது மின்னலு மிடியங் கூடி விழுதல்போல் வினைசெய் கின்றீர் சொன்னசொற் றவறா வண்ணல் தூயசான் றாண்மை யன்றோ இன்னுயிர் தாங்கி யானு மிருப்பதற் கேது வாகும். | |
|
|