60. பிழைக்க வந்தவர் குடிடகளுக் கின்னல்கள் பெரிதும் இழைக்க நொந்துளம் வெகுண்டுசென் றன்னரை யெதிர்த்து மழைக்கை யண்ணலும் அடித்துமே துரத்தவவ் வடவர் புழைக்கை யானைபோற் கெடுத்திட வஞ்சனை பூண்டார். 61. காவி யங்கணி வஞ்சநெஞ் சுடையவக் கயவர் வாவி சூழ்வயல் நாடுடை யவனரண் மனையை மேவி நீறுபூத் துளநெருப் பென்னவே விரும்பும் ஏவ லாளராய்க் காலம்பார்த் தேயவ ணிருந்தார். 62. இன்ன வாறவர் புற்றுறை பாம்பென விருப்ப மன்ன னோர்புது மண்டபங் கட்டிட மதித்துத் தன்னை நேர்தரச் சமைத்தவம் மண்டபந் தன்னில் அன்ன ராங்கொர்பொய்த் தூணினை வஞ்சமா யமைத்தார். 63. முடிய வம்மணி மண்டபம் மன்னனும் முடிவிற் கடிகொள் மண்டபக் காட்சியைக் கண்ணுறுங் காலை இடையி னின்றபொய்த் தூணகத் தொளிந்துமே யிருந்த கொடிய னையகோ மன்னனைக் குத்தியே கொன்றான். 64. நல்ல பாம்பென நஞ்சுடை யரவினை நம்பி இல்ல கத்தினில் வளர்க்குந ரெய்துமவ் விடர்போல் பொல்ல ராயவவ் வாரியர் சூழ்ச்சியைப் புரியா வல்ல னாகிய மன்னவன் பட்டனன் மன்னே. | 2. பொற்கண்ணன் | 65. பொன்னன் றன்னையப் பூரியர் கொன்றபின் அன்னான் பின்ன னாயபொற் கண்ணன் எனுந்தமிழ்ப் பெயரான் மன்ன னாகவே மணிமுடி சூடியே வடவர் என்னு நோய்க்கொரு மருந்தென வேநனி யியன்றான். 66. இயன்ற வஞ்சகச் செயலினை மனத்தகத் தெண்ணி அயின்ற நஞ்சன வாரிய ரத்தக வடுத்துப் பயின்றி டவகத் தெண்ணிடா வகையினிற் பலவா முயன்று வந்தனன் முன்னனைப் போன்றுநன் முறையில். ------------------------------------------------------------------------------------------- 65. பொற்கண்ணன் - பொன் கண்ணன். இது - பொய்ங்கண்ணன், பொய்ங்கணன் என வழங்குகிறது. இதை இரணியாக்ஷன் என மொழி பெயர்த்தனர் வடவர். அக்ஷம் - கண். | |
|
|