81. மறைந்து வாலியைக் கொன்றநின் மன்னவன் பிறந்த வம்மர புக்குடைப் பெண்மணி மறைந்து செந்தமிழ் மன்னனைக் கொன்றவள் பிறந்த விற்குப் பெருமையைத் தந்தனள். | 4. மாவலி | அறுசீர்க் கட்டளை விருத்தம் | 82. புண்ணாடி நின்று தாதூதீ டும்நறும் பூவை நல்லார் கண்ணாடி நின்று காணாவெ ழிலினைக் கண்டு வப்பப் பண்ணாடி நின்று யாழேழி சையினிற் பாட்டி சைப்ப மண்ணாடி நின்று தமிழ்காத் தனனோர் மன்னன் மன்னே. 83. பெற்றோரு வப்ப மாவலி யென்னுநற் பேரு பெற்றான் கற்றோரு வப்பக் கற்பன முற்றுறக் கற்று ணர்ந்தான் மற்றோரு வப்ப மாமன்ன னாகவே வாழ்ந்து வந்தான் அற்றோரு வப்ப இல்லெனா தீந்துவந் தன்னை யன்னான். 84. ஈயென்று வந்தார்க் கி்ல்லையென் னாமலே யீந்து வந்தான் வாயொன்று மச்சொற் றீயதென் றெண்ணியவ் வள்ள லுள்ளம் வாயொன்ற வச்சொல் எல்லாரு மேசெல்வம் வாய்த்தி ருக்க ஆயொன்று பிள்ளை போன்றுத னாட்டினை யாக்கி விட்டான். 85. பொட்ட னிலத்தைச் செய்நேர்த்தி செய்தெருப் போட்டு நன்னீர் அட்டிமுப் போகம் விளைநன் னிலமா ஆக்கு தல்போல் முட்டுத லின்றி யெல்லரும் வாழ்வியல் முற்றி யன்பாய் ஒட்டுற வாழ்ந்தின் புற்றிட வாக்கியின் புற்றி ருந்தான். ------------------------------------------------------------------------------------------- 81. இல் - குலம், மரபு. இத்தமிழ் மன்னனை ஆரியர் வஞ்சித்துக் கொன்றதையே, தமிழர் மானமின்றித் தீபாவளி நோன்பெனக் கொண்டாடி வருகின்றனர். 82. புண்ணாடி - புள்நாடி. புள் - வண்டு. புள் பூவை நாடி நின்று தாதூதிடும் எனவும், பூவை - பூவினைச் சூடும் நல்லார் எனவும் நயமாகக் கொள்க. மண்நாடி - தமிழ் மண் நாடி. 83. மாவலி என்பதை மகாபலி எனத் தற்பவ மாக்கினர் வடவர். மலையாளிகள் இவனைத் தங்கள் முன்னோன் (சேரன்) எனக் கூறிக்கொள்கின்றனர் ஈந்து உவந்து - உவந்தான்; எச்சமுற்று. 84. மாய் - மாய்தல். அச்சொல் மாய ஒன்ற - ஈயென்னும் அவ் விரப்புரை இல்லாக. | |
|
|