86. இல்லாத தொன்றங் கின்மையே வேறிலை யாரு மங்கு கல்லாத தொன்று தீமையே யாகுமெக் காலு மங்கு சொல்லாத தொன்று பொய்மையே யாவருந் துய்ப்ப வற்றுள் நல்லாத லொன்று மானமே மற்றவன் நாட்டின் மன்னே. 87. கல்லாரு மில்லை யெல்லாருங் கற்பன கற்ற வற்றால் வல்லாரு மில்லை மாட்டாரி லாமையால் வாழ்ந்து வக்கும் நல்லாரு மில்லைப் பொல்லாரி லாமையால் நாடி நிற்கும் இல்லாரு மில்லை யீவாரு மந்நாட்டி லில்லை மன்னே. 88., அன்னானிவ் வாறு வாழ்வாங்கு மக்கள்வாந் தாங்கி ருக்கப் பொன்னான வாட்சித் தேரதன் போக்கினிற் போக முன்னர் இன்னாத செய்த ஆரிய நோயுமங் கில்லை யென்னா மன்னான மன்ன னுள்ளூற வின்புற்று வாழ்ந்து வந்தான். 89. ஏற்பாரி லாத நன்னாடெ னும்புக ழெய்த வெங்கும் ஆற்போல மைந்து நேருற மாவலி யாளு கையிற் றோற்பாவை யென்ன இவ்வுலகைத் தங்கள் சூழ்ச்சி யென்னு நூற்பாவி னாட்டும் ஆரியர் கண்டுளம் நொந்து நைந்தார். 90. ஏற்றுண்டு வாழ்த லேதங்கு லத்தொழி லென்று கொண்டார் காற்றுண்ட பஞ்சின் மோதுண்டு நல்வாழ்வு காணவெண்ணித் தேற்றுண்ட சூழ்ச்சி மிக்கானொ ருவனைத் தேர்ந்த னுப்ப மாற்றுண்ட பொன்னின் மாவலி பாலவன் வந்தி ரந்தான். 91. நல்குர வென்னுந் தீக்கொடு நோய்கொலு நஞ்ச மென்னப் பல்கிநா ணாளு மிக்குவ ருத்திடப் பாட ழிந்தேன் ஒல்கியென் பால்நின் றஞ்சிய கன்றது மோட் டெடுப்ப நல்குத லந்நோய்க் குன்கட னாகுமோர் நன்ம ருந்தே. 92. இல்லையென் னாம லினிதே யிரப்போர்க் கீத்து வக்க வல்லையென் றேகேட் டோடிவந் தேன்றமிழ் வள்ள லுன்பால் முல்லையொண் பூவிற் றாதூதும் வண்டென மோந்து வந்து செல்லையென் றேக விடுகென் றொடியாத் தேம்பி நின்றான். 93. தண்டாம லீயும் வள்ளல்பாற் கள்ளமாய்த் தானி ரப்ப ஒண்டாரே யேற்கி னும்முயி ராயினு மோகொ டுப்பான் வெண்டாரை போற்றாழ்ந் தேற்றுமுன் நிற்பவன் மீதி ரக்கங் கொண்டீயும் போதப் பாவியை யோகுத்திக் கொன்று விட்டான். ------------------------------------------------------------------------------------------- 89. ஆல் - ஆலமரம். நூற்பா - நூற்கயிறு. 91. ஒல்கி - சுருங்கி, தளர்ந்து. 92. செல்ஐ. ஐ - சாரியை. ஒடியா - ஒடிந்து, குனிந்து. | |
|
|