பக்கம் எண் :


416புலவர் குழந்தை

   
5. சூரன்
 
ஷ வேறு வண்ணம்
 
         94. இல்லை யென்றுவந் திரந்தவர்க் கீந்து வான்புக ழெய்திய
            நல்ல வன்றனைப் புல்லியான் நாண மின்றியே கொன்றது
            முல்லை வெண்முகைப் பல்லினாய் முறைய தோவெடுத் தறைகுவாய்
            சொல்லு வேனினுங் கேட்டியாற் சூரன் என்னுநற் பேரினான்.

         95. ஓகை வாளியொன் றேவியிவ் வுலக முற்று மெதிர்க்கினும்
            வாகை வேய்ந்திடு மாற்றலான் மலையி னன்னதோள் வலியினான்
            தோகை யேயவன் பேர்சொனாற் றொடைந டுங்குவ ராரியர்
            பாகெ னுந்தமிழ் வாயினான் பகைமை யற்றுயர் வாயினான்.

         96. இவ்வி லங்கையின் றெற்கினி லிருந்த வோர்பழம் பதியிருந்
            தவ்வி லங்குதோட் சூரனும் ஆண்டு வந்தனன் எந்தமிழ்த்
            தவ்வை யின்புற வெம்மினத் தமிழ ரின்புறத் தகவுடன்
            கொவ்வை வாய்ப்பசுங் கிள்ளையக் கொடிய வாரிய ரொடியவே.

         97. மாவி லங்கையின லெங்ஙனம் மங்கை நீயிருக் கின்றனை
            தாவி லாமலே யங்ஙனம் தங்க ளூரிலி ருத்தல்போல்
            ஆவ லாகவவ் வாரியர் ஆணும் பெண்ணுமா யந்நகர்
            ஏவ லாளராய்ப் பற்பலர் இனிதி ருந்துமே வந்தனர்.

         98. கொன்று ணுந்தொழில் மேயவக் கொடிய வாரியர்க் கல்லதை
            ஒன்று மின்னலி ழைத்திடா தோம்பி வந்துமவ் வாரியர்
            நன்றி கொன்றுநா ணாளுமே நயப்ப வுண்டதை மறந்துமே
            வென்றி கண்டிடத் தம்புல வேந்த னோடவண் மேயினர்.

         99. மேய வாரிய வேந்தனும் வெங்க ளத்திடைத் தோற்றுமே
            போயொ ளித்தனன் பாடியிற் போரொ ழிந்தவப் போதினில்
            தாய னதமிழ்த் தலைவனுந் தனித்து லாவிடுங் காலையோர்
            தீய வாரியன் மன்னனைச் செய்த னன்கொலை யையகோ.

         100. அஞ்சி யோடியே பாடியை அடைந்த வாரிய மன்னனும்
            மஞ்சு பேர்முழு மதியென மலர்ந்த னன்முக மகமுடன்
            நெஞ்சி லீரம தின்றியே நேர்மை யற்றவவ் வாரியர்
            வஞ்சி யேமறைந் தஞ்சியெம் மரபை யிவ்வா றழித்தனர்.