115. அன்றொரு பெண்ணி னாலே ஆரியர் பெற்றார் வெற்றி பின்றவன் பெண்டி னாலே பெற்றனன் உம்மான் வெற்றி என்றுமே யிவ்வா றேதான் எய்தினர் வெற்றி யல்லான் வென்றன ரிலையெம் மோரை மெல்லியல் எதிர்த்தும் மோரே. 116. நன்னுதல் நங்காய் நீயும் நலிகுதல் ஒழிநின் கேள்வன் துன்னியே யிலங்கை முற்றித் தொடுகழ லண்ணல் தன்னை முன்னிய களத்தில் வென்று மொய்குழ லுன்னை மீட்டுத் தன்னகர் செல்வா னென்று தானினைத் திரங்கல் வேண்டா. 117. ஞாயிறு குளிரு மேனும் நாண்மதி காயு மேனும் மாயிரு ஞாலங் கோளா மாறினும் மாறா வாண்மை மேயவென் றந்தை தன்னை வில்வலி கொண்டே யென்னங் காயவன் வெல்வா னென்று கனவினுங் கருத வேண்டா. 118. என்னவே இளையோன் செல்வி எங்கையி விலங்கை வேந்தன் தன்னையா னவ்வா றெண்ண வி்ல்லையுன் றந்தை யாற்றல் இன்னென வறிவேன் சற்றும் இலையிலை யதிலோ ரையம் என்னினு மெவ்வா றாமோ வென்றுளம் இனைகு தம்மா. 119. ஆதலா லடியா ளுன்ற னடைக்கல மெனவே அம்மா ஓதியா னுனக்குச் செய்யு முதவியு முளவோ என்னச் சீதையென் றோழி உன்றன் செய்கையா முதவிக் குன்றம் மீதிலென் உலக வாழ்வும் வீழ்வுமுள் ளனகா ணென்ன. 120. என்னென அன்னை யேயீங் கிருந்தெனை யின்று நாளை தன்னிலெப் படியே னுந்தாய் தந்தைநீ தமரு நீயென் மன்னவ னிடத்துச் சேர்க்க வழிசெய்வா யுள்ள மட்டும் கன்னலைப் பழிக்குஞ் சொல்லாய் கனவிலு மறக்க மாட்டேன். 121. வந்ததி லிருந்தே ழெட்டு மாதமா யனையின் மிக்க சொந்தமா யுளமுங் காதுஞ் சுவைபட வுணநா டோறும் செந்தமி ழெனும்பால் வாக்குந் திரிசடைத் தேவீ யுன்றன் தந்தைபாற் சொல்லி யென்னைத் தாட்டுவா யிலங்கை விட்டே. 122. ஒப்பரு மக்கள் வாழு மூர்சுடுங் கொள்ளி தன்னை அப்புறப் படுத்த லம்மா அறமொடு புகழு முண்டாம் எப்படி யேனு மென்னை ஈங்குநின் றாங்குச் சேர்த்தல் கைப்பிடி யிடையா யுன்றன் கடமைகள் தனிலொன் றாகும். ------------------------------------------------------------------------------------------- 121. தந்தை என்றது இராவணனை. | |
|
|