பக்கம் எண் :


420புலவர் குழந்தை

   
        123. தந்தையுன் சொல்லை என்றுந் தட்டவே மாட்டா ரன்றோ
            வந்ததி லிருந்தென் மீது மகிழ்ச்சிமிக் குள்ளா ரன்றோ
            சிந்தையி லென்று மென்றன் தீமையை யெண்ணா ரன்றோ
            பைந்தொடி யெனக்கு நன்மை பண்ணவே மறுக்கா ரன்றோ.

        124. தங்கையை யுருக்கு லைத்த தகாச்செயல் தனக்காற் றாமல்
            எங்கையே யடியா ளென்னை எடுத்துவந் தாரே யன்றிச்
            செங்கைவே லண்ண லென்மேற் செற்றம்வைத் துளரோ இல்லை
            மங்கைநீ சிறிது நல்ல மனம்வைத்தால் வாழ்ந்தே னேழை.

        125. உய்குவ னுன்னா லின்றேல் ஒழிகுவ னெனவே பின்னும்
            கைகுவித் திறைஞ்சி வேண்டக் கைகளைப் பிடித்தே யுள்ளம்
            நைகுதல் தவிர்வா யின்றே நங்கைநீ செலவேற் பாடு
            செய்குவன் றவறே னென்று திரிசடை கூறிப் போனாள்.
 
9. பீடணப் படலம்
 
கலி விருத்தம்
 
        1. தாதவிழ் மலர்த்திரி சடையி னோடுதன்
          காதல னிடம்புகு கருத்தைக் கூறிய
          சீதையி னியல்பினைத் தெளியக் கண்டனம்
          ஈதறி பீடணன் இயல்பு காணுவாம்.

        2. மற்றவ ருரிமையை வலிந்து சூழ்ச்சியாய்ப்
          பெற்றிட நினைத்திடும் பேர வாவினான்
          சற்றுநன் னெறிதவறாத் தமிழர் வாழ்வுக்கோர்
          குற்றமாய்த் தோன்றிய குழவிக் கூடனான்.

        3. பண்டைய பெருமையைப் பகைவர்க் கீந்தனார்
          உண்டுமே தலைவரா யுயர்வு பெற்றிடத்
          தண்டமிழ் மக்களைத் தாழ்மை யாக்கிய
          உண்டவர்க் கிரண்டக முஞற்று பாவியே.

        4. செழுந்தமிழ் மக்களின் சிறப்பைப் போக்கியே
          முழுந்தரா மாரியர் முதன்மை பெற்றிட
          எழுந்ததன் முன்னனை யிகலைச் சேர்ந்துகொல்
          கொழுந்துவிட் டெரியுந்தீக் குச்சி போன்றவன்.
-------------------------------------------------------------------------------------------
        4. முழுந்தர் - மூடர். இகல் - பகை.