பக்கம் எண் :


424புலவர் குழந்தை

   
       26. அறமலி தமிழர்கள் அன்பிற் றோன்றிய
          இறைமகன் றனையொழித் திலங்கை வாழ்வினைப்
          பெறநினைந் தயலவர் பெட்பை நாடிடும்
          திறமிலான் தீங்கெலாஞ் செறிந்த சிந்தையான்.

       27. உதிரிய மானமும் உலர்ந்த நாணமும்
          முதிரிய வஞ்சமும் முறிந்த நெஞ்சமும்
          பதரினும் பதரினப் பகைவன் யாங்கணும்
          எதிரிலா தவன்றனித் திருக்கும் வேளையில்.

       28. தந்தையின் பாற்றிரி சடையு மார்வொடு
          வந்தவ னிணையடி வணங்கி நின்றென
          தெந்தையே தாங்கள்நா னெதனைக் கேட்கினும்
          மைந்துற வேயதை மறுப்ப தில்லையே.

       29. இலையிலை மறுக்கிலேன் ஆவ தென்னெனக்
          கலைதெரி புலவர்கள் கருத்தைக் கொள்ளைகொள்
          மலைநிகர் வலியுடை வாலி தன்னையச்
          சிலைவலான் கொன்றதாச் சீதை சொல்லினாள்.

       30. ஆமவன் வில்வலிக் களவு மில்லைகொல்
          தாமரை மாலையான் சமரை வேண்டிடில்
          நாமதற் கென்செய்வோம் என்ன நங்கையும்
          ஆமவன் பின்னவற் கரசு நல்கியே.

       31. மற்றவன் படையொடிவ் விலங்கை மாநகர்
          முற்றுகை யிட்டிட முனைந்துள் ளானெனச்
          சொற்றனள் சீதையும் எந்தை சொற்றதாப்
          பொற்றொடி வேண்டுமோர் பொருளு முண்டென.

       32. யாதென மற்றவன் இலங்கை முற்றுதல்
          மாதுதன் னாலென வருந்தி நம்மவர்
          தீதினை யகற்றிடச் சிந்தை கொண்டவக்
          கோதைநம் முதவியைக் குறித்து வேண்டினாள்.

       33. எப்படி யாகினும் இலங்கை விட்டவள்
          தப்பினா லருஞ்சமர் தப்பு மாகையால்
          இப்பவே சிலைவலா னிடத்துச் சேர்த்திட
          ஒப்புடன் நமதுபே ருதவி நாடினாள்.
-------------------------------------------------------------------------------------------
       28. மைந்து - வலி. 31. எந்தை - இராவணன்.