42. என்றவ னுரைத்திட இயைந்து நீலனும் சென்றனன் இரண்டகச் செயலைச் செய்யவே தன்றமர் பொன்றினும் அரசு தாங்கிடும் வென்றிநன் னாளினை விழைந்தி ருந்தனன். | 10. ஏவற் படலம் | கொச்சகம் | 1. ஆடுகொடி மதிலிலங்கை யரசுபெறும் பரிசிருக்கும் ஈடிலிரண் டகவிளையோ னிழிதகைமை யதுகண்டாம் கோடியவெஞ் சிலைராமன் குற்றேவ லாயனுமன் மாடமலி நகரிலவன் மனைகாணு மியல்காண்பாம். 2. வளமருவுங் கிட்கிந்தை மன்னவனாந் திறல்வாலி களமருவி யிளையனொடு கைகலந்து பொரும்போது குளமருவி யிரைகொள்ளுஞ் சிரல்போலக் கொன்றன்னான் இளையனர சதுகொள்ள ஈந்துசிலைக் கைராமன். 3. தம்பியொடு மதங்கமுனி தன்னிலையை யடைந்துதனை நம்பியகா தலிபிரிவை நச்சியவன் பச்சையுளம் வெம்பியவள் தனையடைய வேண்டியெழு கழிகாமத் தம்பியிலே நாட்கடலை யவனீந்திக் கரைகாணான். 4. முன்னவனைக் கொல்வித்து முடிபுனைந்த கிட்கி்ந்தை மன்னவனைப் பார்த்தெனது மனைதேடித் தருகென்ன அன்னவனு மனுமனையங் கருகழைத்து மதிவல்லோய் தென்னிலங்கை யதுசென்று சீதையைக்கண் டீங்குறுவாய். 5. எனவனுமன் சரியென்ன இழிகாமக் கொலைராமன் அனுமனையன் பொடுதழுவி ஆழியதைக் கைகொடுத்தென் மனைவியுனை யறியவிது வழிகாட்டு மெனப்பின்னும் எனதுநிலை சொலித்தேற்றி யினிதிருக்கச் சொல்வாயே. 6. அங்கதனுங் கிட்கிந்தை யரசுமெனக் குறவாகி இங்கிருக்கும் வகைகூறி இன்னுமொரு சிலநாளில் உங்களரும் படையோடவ் வுயரிலங்கை வருதுமென மங்கையிடஞ் சொலியவளை மகிழ்ந்திருக்கச் செய்வாயே. ------------------------------------------------------------------------------------------- 3. அம்பி - தோணி, கப்பல். | |
|
|