பக்கம் எண் :


430புலவர் குழந்தை

   
         31.   இறைமகனுஞ் சினங்கொண்டே யேகென்பா னேனென்னிற்
              குறையுடையா னெனப்பின்னர்க் குடிபழியாச் சூழ்ச்சியிதாம்
              நிறைமதியோ யினியொன்றும் நினையாமல் நினைச்சேர்ந்த
              மறவருடன் கட்டாயம் வழிக்கொள்வா யெனவனுமன்.

         32.   அதுகேட்ட பீடணனும் அனுமனையாங் குறத்தழுவி
              புதுவரவே இந்நன்றி பொன்றிடினும் மறக்கில்லேன்
              இதுதவறே னெனவனுமன் எழிலிலங்கைப் பேரரசே
              மதிமுகத்தைப் போய்ப்பார்த்து வரநினைக்கின் றேனென்ன.

         33.   சரியெனவே பீடணனுந் தனதுதிரு மகளான
              திரிசடையை யழைத்தனுமன் செய்தியினை யவட்குறைப்ப
              வரிசையுடன் வணங்கியவள் வாருமென மதியனுமன்
              திரிசடையோ டவள்தோழி செல்லுதல்போற் சென்றானே.

         34.  அனுமனொரு மறைவிலிருந் தம்மணியென் வரவுரைத்துக்
              கனிமொழியை மற்றவர்கள் காணாம லீங்கழைத்துப்
              பனிமொழிநீ வருகவெனப் பாவைமெது வாய்நடந்தே
              அனைவருங்க ணுறங்கிடுங்காலன நடையை யழைத்துவந்தான்.

         35.   வந்துதொழ வனுமனிவண் வந்தவர லாறுசொலப்
              பைந்தொடியு மவர்நலமோ பாவியெனை மறந்திலரோ
              வந்திலரோ இவணென்ன மதிவல்லான் வருகின்றார்
              வந்திலங்கை தனையழித்து மாதுனைமீட் பாரென்ன.

         36.   கேட்டலுமே யுடனடுங்கிக் கிளிமொழியின் னிசைகுழற
              வாட்டடங்க ணூற்றெடுப்ப மதிவல்லீர் தமிழிறைபோல்
              நாட்டிலெவர் நல்லவர்கள் நன்றல்ல வேன்றுணிந்தீர்
              கோட்டமிலாற் கூறெண்ணிற் குடியொடுகெட் டொழிவோமே.

         37.   எந்தையினும் பன்மடங்கா வெனைநடத்தி வருகின்றார்
              வந்தெனது காதலனும் மன்னிக்கும் படிவேண்டின்
              பைந்தொடியென் னோடுபல பரிசுந்தந் தேவிடுப்பார்
              சிந்தையினும் பொருகளத்தைத் தெளியாதீ ரெனப்பின்னும்.

         38.   முன்னரெனைக் கொடுவந்த முதனாளே யிவ்வாறு
              சொன்னனரச் சொற்படியே தோகையெனை நடத்துகிறார்
              இன்னலொரு பலகோடி யெய்திடினு முயிர்விடினும்
              சொன்னமொழி யதுதவறார் துரிசில்லாத் தமிழ்மக்கள்.
-------------------------------------------------------------------------------------------
         36. வாள் தடம் கண். கோட்டம் - மனக்கோணல்.