11. அனுமப் படலம் | கலி விருத்தம் | 1. சோனை வார்குழற் றோகை பெயர்ந்தபின் பூனை போலப் பொருக்கென் றனுமனும் வானி னூடு வளர்மதில் வாயிலிற் போன போது புடையமர் காவலர். 2. கண்டி யாமங் கடைப்பட போதகல் பெண்டி யாவ ளெனவெதிர் பேசிடா தொண்டி யாக வொதுக்குறக் காவலர் அண்டி நோக்கியோ ராணென வையுறீஇ. 3. யாவ ளென்ன வதட்டி வெளியினிற் போவ தென்னவிந் நள்ளிருட் போதினில் நோவி லாமல் நுவலென அஞ்சியப் பாவி யொன்றும் பகர்ந்திலன் நிற்கவே. 4. உண்மை சொல்லி னுயிர்பிழைப் பாயென அண்மை செல்லவை யோவென ஆரடா பெண்மை யானது பேசெனக் கைகளைத் திண்மை யாகப் பிடிக்கத் திமிறினான். 5. கள்ளக் கோல மகற்றியக் கள்ளனைக் கொள்ளப் போந்த பொருளினைக் கூறென உள்ளத் தோங்கு முளவை யுரைத்திடான் மெள்ளத் தேங்கி வெளிப்படப் பார்த்தனன். 6. ஓடிப் போக வுனைவிடே மென்றவர் கூடிக் கைகளைப் பற்றக் கொடியனும் ஓடிப் போவீ ரிலையே லுமதுயிர் ஓடப் போகு மொருநொடி தன்னிலே. 7. என்று கூறி யெதிர்க்கவே காவலர் ஒன்று கூடி யுதைத்தவன் கைகளைக் கன்றி வீங்கிடக் கட்டிவைத் தேயிருள் பொன்ற வந்து பொழுது புலர்ந்ததும், | |
|
|