8. மட்ட விழ்த்த மருமலர்க் காவகம் விட்டு ளத்துவெகுளி தணிந்துகைக் கட்ட விழ்த்திரு கைப்பிடி யாய்க்கொடு கொட்டி சைத்திருக் கோயிலை நண்ணியே. 9. வண்ண வண்டு மகிழ்ந்திசை பாடிட உண்ணு முண்ணுமென் றூட்டி யுவப்புறும் தண்ணந் தாமரைத் தாரணி மார்புடை அண்ணல் முன்ன ரவனை நிறுத்தியே. 10. மன்ன வாழி மருவலர் போற்றிடும் தென்ன வாழி செழுந்தமிழ் நாவலர் பொன்ன வாழி எனவடி போற்றியே அன்ன வன்வர லாற்றை யறைந்தனர். 11. தலைகு னிந்துமுன் னிற்குந் தகவிலான் நிலையு ணர்ந்து நெடிது மிரங்கியே கலையு ணர்ந்த புலவர் கருத்தெழும் அலைபொ ருந்து மகக்கட லண்ணலும். 12. முருக்கு வெஞ்சின மோர்புற மூண்டெழ இரக்க மோர்புற மீர்த்தெழக் கொல்லெனச் சிரிக்கு மேறெனச் சீறுமிவ் வாறவன் சருக்கி வீழ்ந்த தகாநிலை யெண்ணியே. 13. உம்மி றைநல மோவவன் முன்னனைச் செம்மை யாயமர் செய்துவென் றானலோ தம்மி னத்த தமிழருக் காகநீர் இம்மை செய்வ தெலாமுஞ்செய் தீரன்றோ. 14. அறமி குத்த வுனையமைச் சாயவன் பெறவி ழைத்தநற் பேறரும் பேறன்றோ மறமி குத்த படைத்துணை வந்தெனை இறைவ னாக்க விருப்பது நன்றன்றோ. 15. அடிமை வாழ்வை யகற்றித் தமிழரை முடிமை யாக்கநீர் முற்பட டுளீரன்றோ கடமை நீங்கியோர் ஆரியர் காலினும் மிடிமை போல விழத்துணி யீரன்றோ. ------------------------------------------------------------------------------------------- 15. முடிமை - தலைமை. மிடிமை. வறியர். | |
|
|