பக்கம் எண் :


434புலவர் குழந்தை

   
         16.   குற்ற மற்ற குணத்தமி ழரினப்
              பற்றி லுங்களைப் போலவிப் பாரினில்
              உற்ற பேரி லொருவருண் டோவுமைப்
              பெற்ற தாயரும் பேறுபெற் றரன்றோ.

         17.   ஏனங் காத்துப் பிறரடி யேத்திவாய்
              தானங் காத்துத் திரியுந் தமிழர்கள்
              மானங் காத்திட வந்த பிறந்ததும்
              கோனங் காத்த குணப்பெருங் குன்றன்றோ.

         18.   அயலைச் சார்ந்து பெருமை யடைதல்நற்
              செயல தன்றெனுஞ் செம்மை தனைப்பிறர்
              பயிலச் செய்து பழந்தமிழ்ப் பண்பினை
              இயலச் செய்தநும் போற்பெரி யாரெவர்.

         19.   ஒன்றி ரண்டகஞ் செய்தின மோம்புதல்
              ஒன்றி ரண்டக முள்ளவர்க் கேதகும்
              அன்றி ரண்டக மற்ற தமிழர்கள்
              அன்றி ரண்டக மாக்குதல் வல்லரோ.

         20.   ஆண்மை யற்ற வரசனைப் போக்கிவல்
              லாண்மை யுற்ற வரசனைக் கண்டினக்
              கேண்மை யற்ற கிளையடக் கொண்டவிச்
              சூண்மை மற்றெவர் கண்டுளர் சொல்லுவாய்.

         21.   மறமி குத்தபுன் மன்னனைக் கொன்றுநல்
              அறமி குத்த வரசனைக் கண்டதும்
              திறமி குத்த செயலினை யாரினிப்
              பெறமி குத்த வறிவைப் பெறவலார்.

         22.   இனத்துக் கூறுசெ யென்னை யொழித்திட
              மனத்துக் கொண்ட மதிவலோய் உங்கள்பு
              தினத்தி னோடு வராம லெதற்கிங்குத்
              தனித்து வந்தனை சாற்றுவாய் என்னவே.
-------------------------------------------------------------------------------------------
         17. ஏனம் - பிச்சைப் பாத்திரம். வாய்தான் அங்காத்து அங்காத்தல் - திறத்தல். கோன் அங்காத்த. அங்காத்த - உயர்ந்த. 19. ஒன்று இரண்டகம் - பொருந்திய துரோகம். ஒன்று இரண்டு அகம் இருமனம். அன்று - அல்லாமல். இரண்டு அகம் - சூழ்ச்சி, தந்திரம், இரண்டு. அகம் ஆக்குதல் வல்லரோ அன்று, இரண்டு அகம் - ஈரிடம் - ஈரிடத்தன்பு. 20. சூண்மை - தந்திரம்.