23. சென்ற காலைச் செயலை நினைந்தவன் ஒன்றும் பேசா துயிர்ப்புடன் நிற்கவே வென்றி வேலனுன் மீதொரு தப்பிலை ஒன்றி நீயிங்கு வந்ததென் ஓதுவாய். 24. அடிமை யுன்னைநொந் தாவதென் ஐயகோ சுடுமை யற்ற தொழும்பன்சுக் கிரீவனும் வடவ னால்வீர வாலியைக் கொன்றவக் கொடுமை யுள்ளவென் நெஞ்சங் கொதிக்குமால். 25. அரசு வேண்டி யயலவன் காலினிற் பரிசி தென்னவப் பாவிவீழ்ந் தானெனில் வரிசை யின்றி அடிமையாய் வாழநீ குரிசில் தன்னொடு கூடியேன் கெட்டனை. 26. கெட்ட வன்குலக் கேடன் வடவன்கால் தொட்ட வன்முடி சூடென வென்னினும் இட்ட வேலைசெய் தேங்கநீ யேனுடன் பட்ட னையந்தப் பாழ்ஞ்செயல் செய்யவே. 27. வாலி போன்றசெங் கோலுடை மன்னரிவ் வேலை சூழுல கத்தெவர் விள்ளுவாய் ஞால மீது நடைப்பிணம் போன்றவன் பாலி ருப்பதைப் பார்க்கினுந் தாழ்வுண்டோ. 28. உன்னி னத்தொரு பெண்ணை யுருக்குலைத் தின்னு யிர்விடச் செய்த விழிஞரைத் துன்னி முன்னனைக் கொன்று தொழும்புசெய் மன்னன் றன்னொடு வாழுதல் நேர்மையோ. 29. தானி கர்த்த தமிழர் குலப்பகை யான வாரிய ராமன் அடியினை மான மின்றி வருடுதல் என்கொலோ பூனை காலைப் புலியினம் புல்லுமோ. 30. இங்குப் பற்பல கூறி இராவணன் பொங்கு மானப் பொருப்பி லமர்ந்துநீ இங்கு வந்ததன் காரண மின்னென நன்கு கூறென நாணி யனுமனும், | |
|
|