12. படையெழுச்சிப் படலம் | வஞ்சி விருத்தம் | 1. அடைவ குத்த வனுமனின் உடைய பெற்றி யுரைத்தனம் நடையி ழுக்கிய ராமனின் படையெ ழுச்சி பகருவாம். 2. தம்பி யேவலன் றானுமே வம்ப னோவினும் வந்திலன் கொம்பை யந்தக் கொடியனும் தும்பி யேங்கத் துணித்தனோ. 3. மாத ரென்னை மருவவே யோது வாளெனல் பொய்ம்மையே யாது செய்குவ னென்னையிவ் வாது செய்ததம் மானரோ. 4. அவளை யின்றி யரைநொடி குவளை யுண்கண் குவிந்திடா பவள மேனிப் பசுமயில் துவளு மோவகத் துறையெனா. 5. நைந்து சோர்ந்திட ராமனும் அந்த வேளை யனுமனும் நந்து வில்லவ நானிதோ வந்த னென்று வணங்கினான். 6. வணங்கி நின்றவ மைச்சனைத் தணங்கு மார்புறத் தழுவியே மணங்க மழ்குழல் மாதரும் உணங்கி லாதவ ணுள்ளளோ. 7. என்ன வேயவ னீடிலாய் அன்ன முன்னிலு மார்வமாய்த் தென்னி லங்கையிற் சீருடன் மன்னி வாழ்ந்து வருகிறாள். ------------------------------------------------------------------------------------------- 1. அடை - அடைதல். நடை - ஒழுக்கம். 2.தும்பி - யானை போன்ற ராமன். 3. வாது - துன்பம். 5. நந்துதல் - மிகுதல். 6. தணங்குதல் - பெருத்தல். உணங்குதல் - வருந்துதல். | |
|
|