பக்கம் எண் :


440புலவர் குழந்தை

   
          16.   ஆகை யாலினி யையுறேல்
               தோகை யொன்றினுஞ் சோர்விலள்
               ஓகை வேலவ னும்பியும்
               வாகை சூடினன் வாழநீ.

          17.   என்ன வென்னவஃ தென்னவே
               முன்ன னோடவன் முரணியே
               என்னை வேண்டினா னினியனும்
               உன்னை வேண்டென வோதினேன்.

          18.    அடிமை யாயுனை யடைந்திட
               முடிவு செய்தனன் முடிவிலோய்
               வடிவி லங்கையின் மன்னனா
               முடிபு னைந்திடல் முறைமையே.

          19.   மறவ ரோடவன் வருவதா
               உறுதி கூறினன் உண்மையான்
               பெறுதி நீயவன் பெட்பினை
               இறுதி முத்தமி ழிறைவனை.

          20.   பெயரி லோவவன் பீடணன்
               உயிரை யுமுனக் குதவுவான்
               அயரி லாதுனை யடைவதா
               இயல்பு ளானினி தியம்பினான்.

          21.   ஒன்று வானவ ணுற்றதும்
               இன்றை யேபெயர்ந் தேகிநாம்
               சென்றி ராவணன் சிதைவுற
               வென்று சீதையை மீட்குவோம்.

          22.   துன்று நீள்படை சூழவே
               இன்றை யேமதி லிலங்கையை
               நன்று முற்றிட நடக்குவாம்
               என்று மற்றவ னியம்பவே.

          23.   வழுவி லாதியான் வாழவே
               உழுவ லன்புட னுற்றுமே
               கழுவி னாயுளக் கறையெனத்
               தழுவி மற்றுமத் தறுதலை,
-------------------------------------------------------------------------------------------
1          9. இறுதி - ஒழி, வெற்றிகொள். 20. அயர் - ஐயம்.