24. எக்க ளிப்புட னேவலால் அக்க ளிப்புட னனுமனும் புக்க செய்தியைப் புகலவே சுக்கி ரீவனுந் துன்னினான். 25. துன்னி ராமனைத் தொழவவன் மன்ன சென்றனு மானுமென் இன்னு யிரினை யிலங்கையில் நன்னர் கண்டிவண் நண்ணினான். 26. இற்றை யேதமி ழிலங்கையை முற்ற வேயற முறைபெரு கிற்ற தாயகிட் கிந்தையாள் கொற்ற வாவுளங் கொள்ளுவாய். 27. என்ன வேயவ னின்னையே முன்னு போர்மணி முரசறை கென்ன வேநடந் தேவலர் அன்ன ராலதை யாக்கினர். 28. போர்ப்ப றைசெவி புகுதவே ஆர்ப்பெ ழப்படை யாளெலாம் தார்ப்பெ ரும்படைத் தலைவர்கள் சீர்ப்ப டப்படை திரட்டினர். 29. கள்ள மாயருங் கானிடை வள்ள லாந்தமிழ் மக்களுக் குள்ள நாளெலா மூறுசெய் மள்ள ராகிய வடவரும். 30. பூரி யக்குணம் புல்லியே ஆரி யர்க்கடி யாளராய் ஓரி னத்த வுயர்தமிழ்ச் சீரை யெற்றுஞ் செருநரும். 31. முந்தை யோனுயிர் மொண்டுகிட் கிந்தை யாண்டிடு கீழ்மகன் சிந்தை போலச் செயற்படு மந்தை யாந்தமிழ் மள்ளரும். ------------------------------------------------------------------------------------------- 24. எக்களிப்பு - மிகுமகிழ்ச்சி. 26. பெருகிற்றது - பெருகினது. 30. இவர் இரண்டகத் தமிழர். | |
|
|