பக்கம் எண் :


442புலவர் குழந்தை

   
       32.    குறைந்த மானமுங் கொடுமையும்
             மறைந்த வுள்ளமு மடமையும்
             தறைந்த பூரியத் தமிழ்ப்படை
             நிறைந்த னநில நெளியவே.

       33.    கூர மிக்க குணத்தினாற்
             சார மற்ற தமிழர்கள்
             ஈர மற்ற இழிமையால்
             ஆரி யப்படை யாயினர்.

       34.    அறவ ரென்று மருள்மிகு
             துறவ ரென்று சுவையுற
             முறையி லூனுண் முனிவரும்
             மறவ ராயங்கு வந்தனர்.

       35.    கொடுமை யாளருங் குணமிலா
             மடமை யாளரும் வடமகன்
             அடிமை யாளரும் ஆரியப்
             படைய தாகிப் பரந்தவே.

       36.    ஏவ மற்ற விலங்கையை
             மேவ அவ்விடம் விட்டுமே
             காவுங் குன்றுங் கடந்தவர்
             நாவ லின்றி நடந்தனர்.

       37.    நடந்த போய்ச்சில நாளினில்
             அடைந்தி லங்கை யதன்புறம்
             தொடர்ந்த சேனைத் தொகையொடு
             மிடைந்த சோலையில் விட்டனன்.

       38.    விட்ட வாயிடை மேவிவாழ்
             தட்டி லாத தமிழரைக்
             கெட்ட வன்பல கிளையொடு
             கொட்டி யேயுயிர் கொன்றனன்.

       39.    கொன்ற ழித்துமே கொடியனும்
             ஒன்று பாடி யுறைந்தனன்
             கன்றி லாவதி காயனும்
             ஒன்று தூதினை யோர்குவாம்.


                 நான்காவது பழிபுரி காண்டம் முற்றிற்று.

-------------------------------------------------------------------------------------------
       32. தறைதல் - உளமிறுகுதல். 33. கூரம் - பொறாமை. ஈரம் - அன்பு 34. முறை இல் - முறை இல்லாது. 36. ஏவம் - குற்றம். நாவல் - வெற்றியொலி. 37. விடுதல் - தங்குதல். 38. கொட்டுதல் - கெடுத்தல்.