5. போர்க் காண்டம் | 1. அதிகாயன் தூதுப் படலம் | அறுசீர் விருத்தம் | 1. மடியினில் நெருப்புப் போன்ற வஞ்சக னுறவைக் கொண்டு கொடியவன் படையி னோடு குறுகிவிட் டதனைக் கண்டாம் நெடியவன் சொன்ன சொல்லை நினைந்ததி காயன் றன்னைப் பொடியவன் றன்பாற் றூது போக்கிய வாறு காண்போம். 2. ஆரியப் படையி னோடும் அண்ணனைக் கொன்ற பாவி பூரியப் படையி னோடும் பூரியர்க் கடிமை யான பாரிடத் திணையி லைந்தாம் படையொடுஞ் சிலையி ராமன் ஊரினுக் கயலே தங்கி யுளனென வொற்றர் கூற. 3. கெட்டன னேனும் பாவம் கிளையொடு சிறுவன் றூது விட்டுமே சொல்லிப் பார்ப்பாம் வெறுத்துமே பணிவு தன்னைத் தட்டினா னென்னிற் கூர்வேல் தனக்கிரை தருவா மென்று மட்டவி ழலங்கன் மார்பன் மனத்திடை மதித்திட் டானே. 4. மனத்திடை மதித்த வாற்றை மதிவலி யமைச்சர்க் கோதத் தனித்தமி ழரசர் கோவே தகுந்தகு மெனயா ரென்ன அனைத்தையு முணர்ந்து கூறு மமையதி காய னேயிவ் வினைத்திறத் தமைவா னென்ன வேந்தனுந் தகுந்தா னென்றே. | எழுசீர் விருத்தம் | 5. ஏவலன் றனைப்போ யழைத்துவா வென்ன ஏகியே விரைவினி லவனும் மாவலி யுடைய மதிவலி தன்னை வணங்கியே ஐயநின் றன்னைக் காவல னழைத்தா னென்னவே அவனுங் கடிதினி லெழுந்துசென் றடைந்தே ஆவலாய் வணங்கிச் சிறியனைப் பொருளா வழைத்ததே தோவென அண்ணல், | |
|
|