பக்கம் எண் :


444புலவர் குழந்தை

   
         6.   ஆரிய ராமன் படையொடு வந்தே
                  அகழியின் புறத்துவிட் டுளனாம்
             பூரியன் றன்னைப் பொசுக்கலேற் பெனினும்
                  பூவைகேட் டதுபிழை யாமல்
             சீரிலா னிடஞ்சென் றவன்கொடு மையுநந்
                  திறமையும் பொறுமையு முரைத்து
             நேரினில் வந்து பணிந்திடச் சொல்லும்
                  நெறியிலான் மறுத்திடின் மீள்வாய்.

         7.   இப்பெருந் தொழிற்கே யழைத்தன னுன்னை
                  எனவதி காயனு முவந்து
             கப்பிய புகழோய் இத்தொழி லெனது
                  கடமையு முடைமையு மன்றோ
             இப்பொழு தேயான் சென்றவற் குறுதி
                  எடுத்துரைத் தழைத்திவ ணுறுவேன்
             சிப்பிலி தனக்கித் தனைகொலோ வென்று
                  செருக்கியே தொழுதுசென் றனனே.

         8.   சென்றவன் வடவர் செயலினை யெண்ணிச்
                  சினத்தொடு முனத்தொடுங் குமரிக்
             குன்றென வுயர்ந்த வொளிமணி மாடக்
                  கொடித்தெரு வகன்றுமே யிலங்கைத்
             துன்றுயர் கொடியைத் தொழுதுமே யகன்று
                  தொடுகட லகழியைத் தாண்டி
             ஒன்றலர் தங்கி யுறைதரு பாடி
                  யற்றனன் கொற்றவேற் றூதன்.

         9.   கண்டது மறவர் யாரெனப் பெரியோன்
                  கவலையு முவலையு மின்றித்
             தண்டமி ழகத்தைப் பொதுவறப் புரக்குந்
                  தமிழிறை மகனுடைத் தூதன்
             உண்டொரு செய்தி யுமதுகா வலனுக்
                  குரைப்பதென் றிடவவ ரழைத்துக்
             கொண்டுமே சென்று ராமனைத் தொழுது
                  கூறியே விடுத்தகன் றனரே.
------------------------------------------------------------------------------------------
         7. சிப்பிலி - சின்னவன். 8. உனம் - உன்னம் - கருத்து. 9. உவலை - இழிவு.