10. ஆரிய ராமன் தூதனைப் பார்த்தீங் கடைந்ததென் கேட்கவே யுரைக்குங் காரிய மேதா கினுமுனக் குண்டோ கழறென வாய்மொழிக் கலைஞன் மாரிபோற் கொடுக்கும் வண்கைவே லண்ணல் வகுத்துரைத் துன்னிடம் விடுத்த சீரிய செய்தி யுண்டுகேட் குனவே தேறெனத் தொகுத்தின வுரைப்பான். 11. பண்டுநும் மினத்தார் துறவிய ராகப் பழந்தமி ழகத்திடைப் போதக் கண்டவெம் மினத்தார் நனிவர வேற்றுக் கனிந்தவன் புடையரா யினிதீங் குண்டியு முடையு முறையுளு முதவி ஒன்றிய சுற்றமுற் றவராக் கொண்டுமே கூடிக் குலவின ரவருங் குறையிலாக் குடிகளா யிதுருந்தார். 12. பிந்தியுஞ் சிலபேர் நாள்செலச் செல்லப் பெண்டுபிள் ளைகளுடன் போந்தே வெந்தொழில் வேள்வி செய்துயிர் கொல்ல வெறுத்துமே பழந்தமிழ் மக்கள் எந்தமி ழகத்தை விட்டுமே செல்லீர் இல்லையே லுயிர்களைக் கொல்லீர் செந்தழல் வேட்டல் தகாதென நும்மோர் செருக்கள மதுவகுத் தனரே. 13. உங்குல முன்னோர் முனிவருக் காக உதவியாய்த் தமிழகம் போந்தே எங்குல முன்னோர் தங்களைக் கொன்றும் எரிகொளீஇ யரண்களை யழித்தும் தங்கியே யுறவு போனடித் துறவஞ் சனைபுரிந் தழித்தும்வன் றமிழர் தங்களை யுளவ ராக்கியு மெம்மோர் தங்களை யழித்திகல் விளைத்தார். | |
|
|