பக்கம் எண் :


448புலவர் குழந்தை

   
          22.   அன்றியு மெங்கள் சொல்லினை மதியா
                    தருந்தமிழ்ப் படைகளைக் கொண்டே
               இன்றெம தூரை முற்றவும் வந்தாய்
                    என்னினு மிறைவனுன் மனைவிக்
               கன்றுரைத் ததனைக் காக்கவே யுன்னை
                    யழைத்துவா வென்றெனை விடுத்தான்
               உன்றனைக் கோற லவற்கொரு பொருட்டோ
                    உயிர்த்துணை யுயர்குண மன்றோ.

          23.   அன்றையுன் மனைவி நொந்தழு திரங்க
                    அஞ்சலென் றாறுதல் கூறி
               உன்றனை யழைத்து வந்தறி வுறுத்தி
                    உடனனுப் புவலென வுரைக்க
               மன்றலங் குழலும் மகிழ்ந்தனள் அனுமன்
                    வாய்மொழி கேட்டிலை யெனினும்
               இன்றுமு னுரைத்த மொழிபுரந் திடவே
                    என்றனை யனுப்பினா னிறைவன்.

          24.   ஆகையால் நீயு மெமதிறை யவனை
                    யடைந்துநின் றவற்றினை யொத்து
               மாகலை வலனைப் பணிந்துமு னின்று
                    மன்னிப்புக் கேட்டுமே யுன்றன்
               தோகையோ டெமது தாயகம் விட்டுன்
                    தொன்னக ரடைந்துமே வாழ்வாய்.
               வாகைவை வேலான் சொற்படி யுரைத்தேன்
                    மறுக்கில்நீ பொரத்தக வாவாய்.

          25.   என்றுமே தூத னின்னண முரைப்ப
                    எரிசினங் கனன்றுமே பிறரை
               என்றுமே பணியேன் நாளையே போந்தும்
                    இலங்கையோ டுங்களை யழித்து
               வென்றிகொண் டெனது மனைவியை மீட்டு
                    மேலவ ரிடர்தவிர்த் தகல்வேன்
               சென்றுநும் மிறைவற் கோதியே களப்போர்
                    செயத்தக வாக்குதி என்றான்.