34. மீள்கிலா னாகிற் பின்னும் விந்தநா டதனை யன்னான் ஆள்கைய தாக்கி யேனு மவனுற வடைவோ மின்றேல் கேள்களா யவர்க ளோடுங் கெழுமிய நட்பி னோடும் மாள்குவே முறுதி யாக மன்னிப்பீ ரென்னா முன்னம். | இராவணன் | எழுசீர் விருத்தம் | 35. என்ன சொல்லினாய் ராம னென்பவ னெனைவெ லுந்திற முடையனோ உன்னை யார்கெடுத் தார்க ளோவுட லுடன்பி றந்துகொலு நோயனாய் இன்ன னாகநீ நடந்து மேவெளிக் கென்னை யேகொலை புரிந்துமே தென்னி லங்கையைப் பெறநி னைக்குனை தீய னேயுளவு தெரிந்திலேன். 36. பதைப தைத்துளந் தசர தன்முனம் படையை விட்டுமே யோடினான் முதுகு கண்டனன் மீசை தொங்கிய முழும கன்முகங் கண்டிலேன் மதியி லாயவன் சிறுவ ரென்கதிர் வாளி னுக்கிரை யாகுவர் அதையி னுஞ்சிறு பொழுதில் நேரினீ யறிகு வாயென விறைவனும். 37. அன்னை யொத்தநம தாணை யாளியா யரசி ருந்தநம் பாட்டியைக் கொன்னி ழைத்ததவ றின்றி யேமுனங் கொலைபு ரிந்தகொடி யோர்களை என்னி டத்துநனி நன்மை யாளரென் றேத்து நீயுமொரு தமிழனா உன்னை யொத்ததமிழ் மறவ ரல்லரோ வூரை முற்றுகை யிடுகிறார். ------------------------------------------------------------------------------------------- 37. கொன் - சும்மா. | |
|
|