பக்கம் எண் :


456புலவர் குழந்தை

   
          42.   நின்று மேமறைவில் வென்றி வாலியைக்
                    கொன்ற வாறுநேர் நின்றிடிற்
               பொன்று வேமென அஞ்சி வெந்நிடும்
                    போதவ் வாரியன் மனைவியும்
               குன்றிபோல் மறைவில் நின்று பன்முறை
                    கூடியே வடவ ரோடவே
               வென்றி கண்டதமிழ் மாந்த ரன்றனைக்
                    கொன்ற தைமறந்து விட்டையோ.

          43.   பாரி லொன்றுமிணை யில்லை யென்றுதமிழ்ப்
                    பறைய றைந்ததமிழ்த் தலைவனாம்
               சூர னென்றுபெயர் பெற்ற முன்னவனைச்
                    சொரணை யற்றவட வாரியர்
               சார மின்றியுரு வார மானவொரு
                    தடிய னாற்றனியு லாவையிற்
               கார மின்றியை யோவொ ழித்தகதை
                    காதி னின்றுகழிந் திட்டதோ.

          44.   பம்பி வெந்நுற வகன்று பாடியிற்
                    பகைத ணிந்தினி திருக்கையில்
               அம்பி னுங்கொடிய னைய கோவவ
                    ணடைந்து செந்தமிழ் மன்னனாம்
               சம்ப ரன்றனைக் கொன்றொ ழித்தவிழி
                    தசர தன்புதல்வர் தங்களை
               வம்ப னேபுகழ்ந் தேத்து கின்றனை
                    மானம் வெட்கமுனக் கில்லையோ.

          45.   மாண கத்தமிழ் மன்ன ரைச்செலும்
                    வழியில் வாழ்ந்தபல தமிழரை
               நாண மின்றியே கொன்ற புல்லரை
                    நல்ல ரென்றுபுகழ் கின்றனை
               ஆணெ னப்பெயர் கொண்ட பேடியுன்
                    னறிவி ருந்தபடி யென்னவோ
               வீண னேபகைவ ரைப்பு கழ்ந்திட
                    வெட்க மென்பதுனக் கில்லையோ.
-------------------------------------------------------------------------------------------
          42. வாலியைக் கொன்றவாறு மாந்தரனை மறைவில் நின்று கொன்றதை. 44. பம்பி - மிக. வெந் - முதுகு.