பக்கம் எண் :


458புலவர் குழந்தை

   
          50.    மேவி யேகுலப் பகைவர் காலினில்
                     வீழெ னப்புகலு மேவிலாப்
                பாவி யேயுடன் பிறந்தை யாகையாற்
                     பழிமொ ழிந்தபத ரேயுன
                தாவி போக்கிலே னோடி யேபிழைப்
                     பாய டாகுடி கேடனே
                கூவி னாலினி யாவ தொன்றிலைக்
                     குட்ட னேயென்ற தட்டினான்.
 
அறுசீர் விருத்தம்
 
          51.     இன்னன பலவா றாக விறையவ னெரியிற் பொங்கி
                முன்னரவ் வடவர் செய்த முறையிலா முறையை முற்றும்
                இன்னென வெடுத்துச் சொல்ல விரண்டகன் பின்னு முன்னே
                சொன்னதைக் கிளிபோற் சொல்லிச் சுருக்கென வெழுந்து போனான்.
 
கும்பகன்னன்
 
          52.    பின்றவன் சென்ற பின்னர்ப் பெருந்தகை கும்ப கன்னன்
                வென்றிவே லண்ணா வந்த வீணரை யிதோயான் சென்று
                கொன்றொரு நொடியில் மீள்வேன் கோழையைச் சினக்க வேண்டா
                அன்றியு மரத்தின் வேரொன் றகன்றிடி னசையு மோதான்.

          53.    கனையெரி முன்னர்ச் செத்த காடெனச் சுறவ முன்மீ
                னினமென வேங்கை முன்மா னினமெனப் பருதி முன்னர்ப்
                பனியெனக் கீரி முன்னர்ப் பாம்பெனப் பூனை முன்வீட்
                டினமெனப் பகையை வீட்டி யிதோவரு கின்றே னண்ணா.

          54.    தும்பியந் தொடையல் மார்ப சூழ்ச்சியே னிதற்கி யானைக்
                கும்பலி னரியே றென்னக் கொடியவர் குழாத்துட் பாய்ந்தே
                இம்பரி லாரி யப்பூண் டிலாதொழித் திதோயான் மீள்வேன்
                நம்பிநீ விடைதா வென்ன நடுமகன் கனன்று கூறி.
 
கலி விருத்தம்
 
          55.    அண்ணாவிதொ வடவாரிய ரருகோடியே யறிவில்
                நண்ணார்குல மடியோடடி நகராமலே யொழியப்
                பண்ணேனெனில் நலிவுற்றெழு பசிகொன்றசெய்ந் நன்றி
                எண்ணாதொழி முழுமூடரி னிடருற்றினை வேனே.