பக்கம் எண் :


இராவண காவியம் 459

   
          56.   நல்லாளொடு படையாளனை நலிதந்துமே கொன்ற
                பொல்லாமட வடவாரியப் பூண்டீண்டில செய்யே
                னில்லேனெனி லுயிர்போலிய எந்தாய்மொழி தன்னைக்
                கல்லாமலே வாழ்நாளது கழி்மூடனு மாவேன்.

          57.    சின்னஞ்சிறு வினமானிடை செல்லும்புலி யென்ன
                வன்னெஞ்சுடை வடவோர்தமை மடிவிக்குவ னின்றேல்
                அன்னஞ்செறி பழனந்திக ழணிசெந்தமிழ் நாடா
                கன்னென்றிடு வேனீயது கண்டேமகிழ் வாயே.

          58.    கோள்வாயரி யேறாமெனக் குமுறிக்குல வடவோர்
                ஆள்வேலையை மலைவேலினா லழியக்குலை கலக்கி
                மீள்வேனிலை யேல்வண்டுணும் வேரிப்புனல் நாடா
                வாள்வாயுறு வேனீயதை வந்தேயறி வாயே.

          59.    வன்னெஞ்சுடை வடவோர்தமை மாள்விக்குவ னல்லான்
                இன்னஞ்சில நாளெண்ணியே யிலங்கைப்புது வாழ்வை
                முன்னங்கொடு வடவோரடி முடிவைத்தவ ரம்பால்
                துன்னங்கொடு புண்ணோடுடற் சுமைதாங்கியே வாழேன்.

          60    கார்முற்றிய வகழிக்கிடை கதிர்முற்றியே வெயிலார்
                ஊர்முற்றிய வடவாரிய ருயிருற்றுணும் போது
                நீர்முற்றிய காலத்தினில் நிலைபெற்றகல் புள்ளை
                நீர்வற்றிய நிலைகொட்டியை நெஞ்சுற்றிடு வேனே.

          61.    தொலையாவுல களவும்பழி துயர்மென்குழ லாளைக்
                கொலையாளரை யடியோடுயிர் கொன்றேயொழி காலை
                அலைமேவிய வளைநீள்கழி யதுவாழ்கடல் நாடா
                நிலையாமையும் பழிமானமு நெஞ்சந்துற வேனே.

          62.    இன்னாமையே யுருவாகிய விகலாரிய விருளை
                மன்னாமலே யொழிகாலையில் வடிவேலிரா வணனின்
                பின்னோனென வுலகோர்சொலும் பெயருக்கொரு குறையும்
                துன்னாமலே யொளிகாலிரு சுடரைப்பொரு வேனே.
-------------------------------------------------------------------------------------------
          57. கல் நிற்றல் - நடுகல்லில் பொறிக்கப்படுதல். 58. கோள்வாய் - கொல்லுதல் வாய்ந்த. வேரி - தேன். 59. முன்னுதல் - எண்ணுதல். துன்னம் - தையல். 60. எயில் - மதில். நீர்வற்றிய காலத்தில் அகல்புள். கொட்டி - நீர்ப்பூண்டு. 61. வளை - சங்கு. கழி - உப்பங்கழி.