67. சொன்னாலிப் பொழுதேயப் பழிகார வடவர் தொகையோடு நரிநாய்கள் சுவையாரத் தின்றே எந்நாளிப் படியாவ ரிடவுண்டோ மென்றே இசைபாடப் புகழ்சூடி யினிதோடி வருவேன் ஒன்னாரை யெதிர்கண்ட வுயிரோடிப் போக உறவோரைக் குலைகாயி னுதிராடி யொன்னார் மின்னாரைத் தனியாக வழவிட்டுப் பின்னர் வேறொன்றுங் காணாமல் வெறிகொண்ட வேலோய். 68. எந்தாய்நீ போவென்று தமிழ்வாய்தி றந்தால் இன்னாரை யுலகத்தி லின்றோ டிலாமே இந்தாரு மெனவார நரிநாய்க ளுண்ண இரையாக்கி யிமையாமுன் விரைந்தோடி வருவேன் சந்தாடிச் சினைவேங்கை மரந்தாவு மந்தி தாய்நாணப் பிள்ளைக்குத் தலைவாழை யிட்டுச் செந்தேனின் சுவையுண்ட பலவின்சு ளையைத் தின்னென்ன வேயூட்டுந் திகழ்குன்ற நாடா. 69. பனைவெட்டி யெழுதுண்டு படவெட்டி யவையும் பலபட்ட பிளவுண்டு படவெட்டு மொளிவாள் தினைபட்ட சிறுதட்டை யதுபட்ட வீர்க்கின் சிதர்வெட்ட வாய்நாணிச் சிறைபுக்கு மோதான் சினைபட்ட பெருவாளை கமுகுக்க ளுண்டு தெளிவற்ற வெறிகொண்டு புறமுன்றில் வீழப் புனல்பட்ட கருமேதி யலைபட்டு ழக்கும் பூந்தாம ரைப்பொய்கை சூழ்பண்ணை நாடா. 70. பொருதாது தனிநின்ற பொருவற்ற வனையைப் புகலின்றி யையோபெண் கொலைசெய்து கொன்ற கருதாரை யிமையாமுன் கழுகுண்ணத் தந்து கதிர்வேலி னலர்தும்பை யுதிராமுன் வருவேன் ------------------------------------------------------------------------------------------- 67. வேலை எதிர்கண்ட ஒன்னார் உயிர் ஓடிப்போக. ஒன்னார் ஐ; ஐ - சாரியை. உறவோர் - துணைவந்தோர். குலைகாய் - தென்னங்காய். உதிர ஆடி - உதிரும்படி கொன்று. 68. சந்து - சந்தனமரம். சுவை உண்ட - சுவையைக் கொண்ட - தேனிலூறவைத்த சுளை. 69. பலபட்ட பிளவு உண்டுபட - பல பிளவாக. சிதர் - நுண்மை. கள் - தேன். மேதியின் - புறமுன்றில் வீழ. புறமுன்றில் - முதுகு. வாளை துள்ளிக் கமுகடைந்து கள்ளுண்ட தென்க. 70. அனை - தாடகை. புகல் - துணை. கைசெய்தல் - வினைத் திறமையோடு செய்தல். உருள் - சக்கரம். மன் - உறுதியாக. விஞ்சாமல் - எஞ்சாமல். | |
|
|