பரிந்துரைகள் | ‘குத்தூசி’ குருசாமி அவர்கள் | ழுநம் புலவர் வந்தார். அவர் உதட்டில் பெருங்காயம். இப்போது தான் அது ஏற்பட்டிருக்க வேண்டும். இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.ழு ழுஎன்னய்யா, புலவரே, உதட்டில்? எங்கேயாவது விழுந்து விட்டீரோ? என்று கேட்டேன். ழுவிழவில்லை; விழுந்து கிடப்பவர்களைத் தூக்கிவிடும் தொண்டினால் ஏற்பட்ட வினை இது.ழு ழுவிளக்கமாய்ச் சொல்லுமய்யா! காவியம் பாடியவராதலால் கற்பனைரசத்தில் தோய்த்துப் பேசாதேயும்? பச்சையாகக் கூறுமே! எந்தக் காலியின் வேலை இது?ழு ழுகாலியா! அவனே தேவலாமே! மூளைக் கோளாறைவிட காலித்தனம் ஆபத்தல்லவே! மதிகலங்கிய மங்கை ஒருத்தி ஊரில் திரிகிறாளே! அவள் வேலைதான் இது! அவள்தான் ஆகஸ்ட் 15 சுந்தரி!ழு ழுஅடேடே! அவளா! உம்மீது அவளுக்கென்ன கோபம்?ழு ழுஎன் மீதா? என்மீது அவளுக்கு ஒரு கோபமும் இல்லை. என் குழந்தை ழுஇராவண காவியம்ழு அவள் கண்ணை உறுத்தியதாம்! அவளுக்குப் பைத்தியம் தீர்ந்தால் கல்யாணமாகும்; கல்யாணமானால் பைத்தியம் தீருமாம். பி்ள்ளை யாசையால் சில நேரங்களில் யார் யார் பிள்ளைகளையோ தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் என் குழந்தையைக் கண்டாள். பொறாமை பீறிட்டுக் கிளம்பியது. தன் கல் மூட்டையை அவிழ்த்து, கல் ஒன்றை எடுத்து வீசினாள். அது என் உதட்டில் பட்டது. இரத்தம் சொட்டுகிறது. ஆனால் நான் அதைத் துடைப்பதாகக்கூட எண்ணமில்லை. ஆகஸ்ட் சு(த)ந்தரிக்கு அசல் | |
|
|