பக்கம் எண் :


474புலவர் குழந்தை

   
          35.   காழ்த்திற மறவர்கள் களித்துக் கண்கொளப்
               பாழ்த்திற வாரியப் படையை மண்கொள
               வீழ்த்தியே யின்னையே வெற்றி கொண்மென
               வாழ்த்தியே படைக்கலம் வழங்கு வாரரோ.

          36.   கட்டிய கழலிணை கறங்கக் காவிதிப்
               பட்டம தடைந்திறை பார்வை தாங்கிநேர்
               தட்டிலாத் தமிழ்ப்படைத் தலைவ ராயரை
               மட்டவிழ் தும்பைதூய் மறவ ரேத்துவர்.

          37.   சினத்துமே செல்லுமிச் செழுந்த மிழ்ப்படைக்
               கெனைத்தவர் பிழைத்தன ரிறுதி காணுவர்
               இனித்தடை யிலையென விரங்கி நீள்கொடி
               மனைத்தலை மடந்தையர் வள்ளை பாடுவர்.

          38.   தானையை யிலகுபைந் தழைய தாக்கியே
               தோனிவந் தொழுகுநீர்ச் சோரி தேக்கியே
               யானைக ளுகளுசே றதனி லாரியர்
               நானுனி முடித்தலை நடுவ மென்பரால்.

          39.   பெற்றவ ருவப்புறப் பிழைத்த லின்றியே
               பெற்றவிவ் வுடற்பயன் பெற்ற மின்றென
               உற்றவ ரோடுதா முறுதி யாய்ப்பெறுங்
               கொற்றம திவையெனக் கூறு வார்சிலர்.

          40.   மாணிழை விறலியர் மகிழின் விம்முவர்
               பூணிய பறைகுழல் புதிது பண்ணுவர்
               யாணரின் றேயடைந் தேமென் றார்வொடு
               பாணர்கள் சீறியாழ்ப் பண்ணு வாரரோ.

          41.   அல்லொடு பகலுறை யமர்ந்த தாழ்வுபோய்ப்
               புல்லியே பகையுடற் புதிய வாழ்வுறும்
               பல்லிய படைக்கலம் பழுது பார்த்திடக்
               கொல்லர்க ளூதுலை குருகை நோக்குவர்.
-------------------------------------------------------------------------------------------
          35. காழ் - உறுதி. கண்கொளல் - கடுஞ்சினங்கொளல். 36. மட்டு - மணம், தேன். 37. வள்ளை - உலக்கைப் பாட்டு. 38. தோல் நிவந்து - தோலினின்று தோன்றி. நால் நுனி - தொங்கும் நுனி. உகளுதல் - திரிந்துழக்குதல். 41. புல்லுதல் - பொருந்துதல். பல்லிய - பலவாகிய. உலைகுருகு - உலையையும் துருத்தியையும்