42. தெருத்தலை முரசொலி செவிபு காமுனம் பொருக்கெனச் செருக்களம் புகுந்து ழக்கியே இருக்கையை யெய்துவ மென்ன மாக்குலம் தருக்கொடு மதிற்சுவர் தாவிக் கத்துமால். 43. வெளிறிய கோட்டினால் விலங்கிக் கால்துவைத் தொளிறுவாள் மறவரி னுயிருண் போமெனப் பிளிறியே யுடலினைப் பீறி மொய்வெறிக் களிறுகள் வெளிப்படக் கந்தை யுந்துமால். 44. ஆரியர் துவன்றிய களத்து ளாம்பிணச் சோரியி னிடையுருள் துவண்டு சேப்புறத் தேரினை யிழுக்கவே திரண்டு மாக்களை வாருமென் றுயர்கொடி மலர்க்கை காட்டுமே. |
வஞ்சித்துறை |
45. இன்ன விலங்கை 49. தும்பை துலங்க நன்னகர் ஞாட்பின் வம்பர் மலங்கத் மன்னு மறமிக் தம்பெயர் தங்க கின்னென் றெழுந்த. வெம்பி விரைவர். 46. வெஞ்சின மிக்கு 50. ஓகை யொடுநல் விஞ்சிய வீரர் வாகை மலர அஞ்சிட வல்லார் வேகழல் வீரர் நெஞ்சு நிவப்பர். பாகு படுவர். 47. ஈடி லிலங்கை 51. வெற்றிவை வேலைக் மாட மறுகிற் கொற்றவை கொள்ள பீடு பிறங்கக் இற்றென ஈந்து கூடினர் கொல்லே. செற்றஞ் சிறப்பர். 48. உந்து முழிஞை 52. பெற்றவர் பெட்பக் மைந்த மறவர் கொற்றவூர் கோளின் வந்த வடவர் வெற்றிவாள் வீசி ஐந்தற வார்ப்பர். முற்றுவர் முன்பே. |
------------------------------------------------------------------------------------------ 42. மா - குதிரை. 43. விலங்கி - குத்திக்கொன்று. கந்து - கட்டுத்தறி. 44. துவன்றிய - செறிந்த. 45. ஞாட்பு - போர். 46. அல்லார் - பகைவர். நிவப்பர் - உயர்வர் - மறவுணர்வு மிகுவர். 48. உந்துதல் - மேலேறுதல். ஐந்து - ஐம் புலன், ஐந்து அற - உணர்வுகெட. 49. வம்பர் - பகைவர். 50. மலரவே கழல் வீரர் எனவும், வேகு அழல் வீரர் எனவுங் கொள்க. வேகின்ற தீப் போலச் சினமிக்கவர். 52. ஊர்கோள் - திங்களைச் சூழ்ந்துள்ள வட்டம். முன்பு - வலி. மறவுணர்ச்சி. |