பக்கம் எண் :


476புலவர் குழந்தை

   
          53. விண்மதி வெள்கப்                  56.  அடுபகை யாளர்
             பண்மதி பாண்டில்                       ஒடிபட வுள்ளம்
             மண்மதி வன்கைக்                       இடியென வேகிடு
             கண்மதி காலும்.                      கிடுவெனுங் கிணையே.

          54. எரிசின மெல்லோன்                 57. ஆடுற வஞ்சி
              பரிசு படவே                          ஓடவே யொன்னார்
              உரசு முருமின்                         ஈடரி யேறிற்
              முரசு முழங்கும்.                        கோடு குமுறும்.

          55. அங்கிக லார்ந                      58. மறையவர் மருள
             டு்ங்கியொ டுங்கப்                       நிறையரும் மறவர்
             பொங்கலைப் போலச்                    இறைமகிழ்ந் திடப்போர்ப்
              சங்கமு ழங்கும்.                        பறையடி படுமே.
 
கலித்துறை
 
          59. தெருவி லாடிளஞ் சிறுவனைச் செருப்பறை கேட்டே
             உருவ வொண்கழ லணிந்துடை யுடுத்தியா ரியரைக்
             கருவ றுத்துவா வென்றுவேல் கைகொடுத் தனுப்பும்
             ஒரும கன்றனை யன்றிவே றிலாத்தமி ழொருதாய்.

          60. பற்றி லாதுமு னாளெதி ராரியப் படையை
             வெற்றி கண்டதா லுந்தைமு னிறைதர விரும்பிப்
             பெற்று வந்தனன் பாரெனக் காட்டுவாள் பீழை
             யற்ற வோர்தமி ழன்னைகா விதிப்பெய ராழி.

          61. இந்த வொண்கதிர் வாளினைத் தமிழகத் தினியாம்
             வந்தி லோமென வோடிட வடவரை யோட்டி
             அந்த நாளினி லிறைதர முதற்பரி சாக
             உந்தை பெற்றது பாரெனக் காட்டுவ ளொருதாய்.
-------------------------------------------------------------------------------------------
          53. பண்மதி - அழகிய. பாண்டில் - கேடயம். கைக்கண் மதிகாலும் - கையிடமாக நிலவு ஒளிவீசும். 54. எல்லோன் - சூரியன். உருமு - இடி 57. ஆடுதல் - பொருதல். 60. பீழை - குற்றம். ‘காவிதி’ என்னும் பட்டம் பொறிக்கப்பட்ட மோதிரம்.